மேலும் அறிய

Tamilnad Mercantile Bank: மெர்க்கண்டைல் வங்கியில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை..!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. 

 தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அவர்களை கண்காணிக்கும் பணி என்பது வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், கண்காணிப்பதோடு மட்டுமின்றி முறையாக கணக்குகாட்டவில்லை எனில் அவற்றை சோதனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வருமான வரித்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிரடி சோதனையை வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 5 வாகனங்களில் வந்த 16 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது. 
நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக கணக்கு காட்டாத காரணத்தினால் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கு மக்களுக்கு தர வேண்டிய வட்டிகள், பங்கு ஈவுத்தொகையில் குறைபாடுடன் கணக்கு காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், வங்கி ஊழியர்கள் மட்டுமே மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை பொறுத்தவரை 1921ம் ஆண்டு துவங்கி தமிழகம் முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் வருமான வரித்துறை சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget