மேலும் அறிய

PMK: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: பாமக எம்.எல்.ஏ குடும்பத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

PMK : பா.ம.க. எம்.எல்.ஏ. வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சதாசிவம் குடும்பத்தினர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பா.ம.க. எம்.எல்.ஏ. வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சதாசிவம் குடும்பத்தினர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதாசிவம். இவர் பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவர். இவர் மனைவி பேபி. மகன் சங்கர்; மகள் கலைவாணி. மகனுக்கு கடந்த 2019 ம் ஆண்டு முருகேசன் என்பவது மகள் மனோவியுடன்  திருமணம் நடந்தது. சங்கர் - மனோவியா தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது.

இருவர்கள் இருவரும் சமீப காலமாக பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனோவியா கணவரை பிரிந்து தந்தை வீடில் வசித்து வருகிறார். மூன்று வாரத்திற்கு முன்பு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “ திருமணத்தின்போது கார் ஒன்றும் 250 பவுன் தங்க நகைகளும் என் பெற்றோர் திருமண சீர் வரிசையாக எனக்கு அளித்தனர். தற்போது மீண்டும் கார் கேட்டு எனது கணவர் கொடுமைபடுத்துகிறார். இதற்கு மாமனார் எம்.எல்.ஏ. சதாசிவமும் மாமியார் பேபியும் உடந்தை.” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த புகாரின் பேரில் விசாரித்த சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் எம்.எல்.ஏ மகன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வரதட்சணை, கொடுமைபடுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக சேலம் மேட்டூர் பாமகவினரிடம் பேசியபோது "எம்.எல்.ஏ சதாசிவம், தான் பார்த்து கொண்டிருந்த தொழிலை மகன் சங்கர் கவனித்து கொள்ளும்படி கொடுத்துவிட்டார். எம்.ல்.ஏ ஆனதில் இருந்து தொழிலை மகன் சங்கர் தான் பார்த்து கொள்கிறார். இது குடும்ப விவகாரம் பெரிதாக எதுவும் வெளியே வராது. சங்கருக்கும் அவரது மனைவிக்கும் மனஸ்தாபங்கள் இருந்தது, யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துபோனால் பிரச்னை சரியாகிவிடும்" என்று கூறினார்கள்.

நேரில் ஆஜராக உத்தரவு

 இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.எல்.ஏ.சதாசிவம், மகன் சங்கர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது. அப்போது சதாசிவம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஜாதா, ’கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

அதோடு, காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை இருக்கிறதா என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் சதாசிவம் குடும்பத்தினர் ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 4-ம் தேதி காலை 11 மணிக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சதாசிவம் குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு, முன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?
Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?
Watch Video: ஸ்பெயின் மன்னர் மீது முட்டை, சேற்றை வீசிய பொதுமக்கள் - காரணம் என்ன? வைரலாகும் வீடியோ
Watch Video: ஸ்பெயின் மன்னர் மீது முட்டை, சேற்றை வீசிய பொதுமக்கள் - காரணம் என்ன? வைரலாகும் வீடியோ
WTC Final India: WTC ஃபைனலுக்கு போக இந்தியா கட்டாயம் செய்ய வேண்டியவை - குறுக்கே வரும் 4 அணிகள், கனவு பலிக்குமா?
WTC Final India: WTC ஃபைனலுக்கு போக இந்தியா கட்டாயம் செய்ய வேண்டியவை - குறுக்கே வரும் 4 அணிகள், கனவு பலிக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?
Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?
Watch Video: ஸ்பெயின் மன்னர் மீது முட்டை, சேற்றை வீசிய பொதுமக்கள் - காரணம் என்ன? வைரலாகும் வீடியோ
Watch Video: ஸ்பெயின் மன்னர் மீது முட்டை, சேற்றை வீசிய பொதுமக்கள் - காரணம் என்ன? வைரலாகும் வீடியோ
WTC Final India: WTC ஃபைனலுக்கு போக இந்தியா கட்டாயம் செய்ய வேண்டியவை - குறுக்கே வரும் 4 அணிகள், கனவு பலிக்குமா?
WTC Final India: WTC ஃபைனலுக்கு போக இந்தியா கட்டாயம் செய்ய வேண்டியவை - குறுக்கே வரும் 4 அணிகள், கனவு பலிக்குமா?
Breaking News LIVE 4th NOV 2024: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்' - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 4th NOV 2024: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்' - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!
Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!
BCCI Rohit Kohli: ”இந்தியாவிற்காக செய்தது போதும்” - 4 மூத்த வீரர்களை வீட்டிற்கு அனுப்ப தயாரான பிசிசிஐ, தப்புமா தலைகள்?
BCCI Rohit Kohli: ”இந்தியாவிற்காக செய்தது போதும்” - 4 மூத்த வீரர்களை வீட்டிற்கு அனுப்ப தயாரான பிசிசிஐ, தப்புமா தலைகள்?
IND vs NZ: என்னதான் ஆச்சு? டெஸ்ட் போட்டியின் அடிப்படையை மறக்கிறதா இந்தியா?
IND vs NZ: என்னதான் ஆச்சு? டெஸ்ட் போட்டியின் அடிப்படையை மறக்கிறதா இந்தியா?
Embed widget