மேலும் அறிய

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

அல்லு அர்ஜூன் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பவன் கல்யாண் வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலங்கானா அரசுக்கு ஆதரவாக  அவர் பேசியிருப்பது அல்லு அர்ஜூன் ரசிகர்களிடம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  கூட்ட நெரிசலில் சிக்கிய அந்த பெண்ணின் மகனும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தெலங்கானவில் மிகப்பெரிய பூதாகரமாக மாறியது. இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,   நீதிமன்றம் இவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

அல்லு அர்ஜூன் விவகாரத்தில் தெலுங்கு திரையுலகமே அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. ஆனால் தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூனுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தார். இதை அடுத்து தெலங்கான திரையுலகினர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்திது இந்த சம்பவம் குறித்து பேசினார்கள்.

இந்த நிலையில் தான் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக தெலங்கானா அரசுக்கு அவருடைய ஆதரவை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது தான் போலீசின்  கடமை. சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான் , இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பைத் தான் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அதேபோல அங்கு என்ன சூழல் நிலவியது என்பதை தியேட்டர் ஊழியர்கள் அல்லு அர்ஜுனுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அவர் வந்த பிறகு நிலைமையைச் சமாளிப்பது கடினம். 

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை அல்லு அர்ஜுன் முன்கூட்டியே நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும். அப்படி அவர் சந்தித்து இருந்தால் நிலைமையைச் சற்று அமைதிப்படுத்தியிருக்கலாம் என்று பவன் கல்யான் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு அல்லு அர்ஜூன் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காரணம், ஆந்திர துணை முதலமைச்சர்   பவன் கல்யானும் அல்லு அர்ஜூனும் உறவினர்கள். அதாவது அல்லு அர்ஜுனின் அத்தை சுரேகாவை தான் பவன் கல்யாணின் மூத்த சகோதரரான நடிகர் சிரஞ்சீவி திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வீடியோக்கள்

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!
BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget