10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜனவரி 2-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசுத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2025ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பெயர்ப் பட்டியலை சேர்த்தல் / நீக்கம் தொடர்பாக கூகுள் படிவம் (Google ஃபார்ம்) பூர்த்தி செய்து ஜனவரி 2ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
2024- 2025ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவரின் ஜிஆர் எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் 13.11.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யுமாறும். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அத்திருத்தங்களை 15.11.2024 முதல் 22.11.2024 வரையான நாட்களில் பதிவேற்றம் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது.
பெயர்ப் பட்டியல் பதிவிறக்கம்
மேலும் திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மார்ச்/ ஏப்ரல்- 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை 24.12.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரையினை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 2 கடைசி
தற்போது மார்ச்/ ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலில் விடுபட்டுள்ள மாணவர்களைச் சேர்த்திடவும் இறப்பு, மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கம் செய்திடவும் இத்துடன் இணைத்து அனுப்பப்படும் கூகுள் படிவத்தினை 02.01.2025-க்குள் பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உரிய பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே
மேலும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் பெயர்களை மட்டும் பெயர்ப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்திடும் பட்டியலில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீண்டநாள் விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களின் உரிய பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நீக்கம் செய்திட கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, பெயர்ப் பட்டியலில் நீக்கம் கோரி அரசுத் தேர்வுகள் அலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பி இருப்பினும், தற்போது, தேர்வெண்ணுடன் அம்மாணவர்களின் விவரங்களையும் கூகுள் படிவத்தில் (000916 86௦0) தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

