TTF Vasan Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்! POLICE விசாரணையில் திடுக்!
மாதம் ஒரு சர்ச்சையில் சிக்கும் சர்ச்சை நாயகன் டிடிஎப் வாசன், தனது கையில் மலைப்பாம்புடன் இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி புதிய சிக்கலில் மாட்டியிருக்கிறார்.
யூடியூபர் டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி அதை வீடியோவாக வெளியிட்டு 2கே -கிட்ஸ்களிடம் பேமஸ் ஆனவர். கை விட்டு பைக் ஓட்டுவது, ஸ்டண்ட் அடிப்பது , பொது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் படி பைக் ஓட்டுவது என பல்வேறு வழக்குகள் இவர் மீது இருக்கிறது.
இப்படி தொடர்ந்து சர்ச்சை நாயகனா வலம் வரும் டிடிஎப் கொஞ்ச நாட்களாக அடங்கி இருந்தார் இந்த நிலையில் தான் பாம்பு மூலம் இப்போது புதிய சிக்கலில் வாண்டடாக மாட்டியிருக்கிறார்.
டிடிஎப் வாசன் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காரில் உள்ளே அமர்ந்திருக்கும் வாசன் கையில் பாம்பு ஒன்றை வைத்திருந்திருக்கிறார். அந்த மலைப்பாம்பிற்கு ஒன்றரை வயது ஆகியுள்ளதாகவும், பெயர் 'பப்பி' என வைத்திருப்பதாகவும், மகாராஷ்டிரா காட்டில் டிரக்கிங் போகும்போது இது தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
பின்னர் காரை விட்டு இறங்கி வந்த அவர், பக்கத்தில் உள்ள ஆட்களிடம் பாம்பை காட்டியுள்ளார். பாம்புக்கு முத்தமிட்டிருக்கிறார்.
பாம்பு வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் டிடிஎப் வாசன் மீது பாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், சட்ட வல்லுநர்கள் ஆலோசனையோடு வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றே தான் பாம்பை வீட்டில் வளர்த்து வருவதாக வாசன் தெரிவித்திருக்கிறார்.
License இருப்பதால் இந்த விவகாரத்தில் டிடிஎஃப் எப்படியோ தப்பித்துவிட்டாலும், அவர் வாயை விட்டு மற்றவர்களை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.
டிடிஎஃப் வாசனின் பாம்பு வீடியோவில் அவர் சொன்ன ஒரு தகவலால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வாசன் கையில் பாம்பு உடன் வெளியிட்ட வீடியோவில், சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் உள்ள பெட் ஷாப் ஒன்றில், தனது பாம்புக்கு கூண்டு வாங்கிச் சென்றதாகவும், அங்கு பாம்பும் விற்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது அரியவகை கிளி மற்றும் ஆமை ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர்.
வழக்கமாக வாயை விட்டு வம்பில் மாட்டும் டிடிஎஃப் வாசன் இந்த முறை மற்றவர்களை வம்பில் மாட்டிவிட்டுவிட்டார் என நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.