இனி கோயில் யானையிடம் ஆசிர்வாதம் பெறமுடியாது.!பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! 39 உத்தரவுகள்.!
Temple Elephant: பக்தர்களை யானைக்கு அருகில் அனுமதிக்க கூடாது என பல்வேறு உத்தரவுகளை அறநிலையத்துறையானது, பாகன்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களில் பராமரிக்கப்படும் யானைகளை பராமரிப்பது தொடர்பாக, அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி செயல்பட மீண்டும் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
1. யானைகள் உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புற சூழ்நிலையுடன் மிகவும் கடினமான தரைதளம் இல்லாமல் இருப்பது நல்லது. சரியான கால் பராமரிப்புக்காக டெதரிங் பகுதியில் மண் மற்றும் மணல் இருக்க வேண்டும்.
2. பக்தர்கள் மற்றும் மது அருந்தியவரை யானையின் அருகில் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. ஆபத்தை விளைவிக்கும் எவ்வித செயல்பாடுகளையும் யானையிடம் செய்வதை அனுமதிக்க கூடாது.
3. யானையுடைய பாதம், நகக்கண், தந்தங்கள் வெளிவரும் பாகங்கள் மற்றும் பிறப்புறுப்பில் முறையாக தோக்காமல்லி எண்ணையிட்டு" (Decamali Oll) பராமரிக்க வேண்டும்.
4. யானையின் எடை மற்றும் வயதுக்கு ஏற்றவாறு உணவு வழங்கப்பட வேண்டும். உணவளிக்கும் முறை கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. யானையின் தேவைக்கிணங்க உள்ளூரிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உணவு வழங்கப்பட வேண்டும். புல் மற்றும் பச்சை இலைத் தழைகள் அதிகமாக அளிக்கப்பட வேண்டும்.
யானையின் எடை மற்றும் வயதிற்கேற்ற உணவுப்பட்டியல்
5. வெப்பம் அதிகமாவதற்கு முன்னர், Musth காலங்கள் தொடங்குவதற்கு முன்னர், கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உணவு முறை மாற்றப்பட வேண்டும்.
6. யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது அல்லது Musth காலங்களின் போதோ, அதனை சங்கிலியால் உறுதியாக பிணைத்து, அதற்கு தேவையான உணவு தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைக்க வேண்டும். யானைப்பாகன் யானையை அணுகுவதை தவிர்க்க வேண்டும்.
7. ஒவ்வொரு யானைக்கும் இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் கூடிய கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும். குறைந்தபட்ச தரை பரப்பளவு மற்றும் 9 மீட்டர் x 6 மீட்டர் × 6 மீட்டர் உயரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
8.யானைகளை புகைப்படம் எடுப்பது யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
9. உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
10. திருக்கோயிலில் பராமரிக்கப்படும் யானை நிழல் அமைந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
11. யானைகள் நிறுத்தி வைக்கப்படும் தரைப் பகுதிகள் சமமாக மிருதுவாக இருக்க வேண்டும் என்பதால், யானை கட்டும் இடத்தில் மணல் தரை அல்லது மிருதுவான மண் தரை இருக்க வேண்டும். யானை கட்டும் இடத்தில் மணல் அல்லது மண் சமமாக பரப்பி அதன் மீது நிறுத்தப்பட வேண்டும் அல்லது சமமான புல் தரையில் நிறுத்தலாம்.
12 யானை தங்கும் இடம் தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். யானையின் சிறுநீரில் யானை நீண்ட நேரம் நின்றால், அதன் கால்களில் நோய் பாதிப்பு ஏற்படும். ஆகவே, சிறுநீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் மற்றும் நீர் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
13. இரவு நேரங்களில் படுப்பதற்கு சமமான மிருதுவான மணல் அல்லது மண் பரப்பிய தரையில் படுக்க வைக்கப்பட வேண்டும்.
14. யானையை வாரத்திற்கு குறைந்தது 4 முறையேனும் குளிப்பாட்ட வேண்டும். கோடைக்காலத்தில் தினமும் குளிப்பாட்ட வேண்டும். யானையை குளிப்பாட்டும் பொழுது. முதன்மையான யானைப்பாகன் உடனிருந்து முன்புறம் குளிப்பாட்ட வேண்டும். அவ்வாறு குளிப்பாட்டும் பொழுது தேங்காய் மட்டை கைக்கு அடக்கமான மிருதுவான செங்கல் வைத்து நன்றாக யானையின் உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அப்பொழுதுதான் யானையின் உடம்பின் தோல் பகுதியில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படும். மேலும் யானைக்கு யானைப்பாகன் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டு யானைப்பாகனின் உத்தரவிற்கு கீழ்படிந்து நடக்கும். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குளிப்பாட்ட வேண்டும்.
15. சாதாரணமான ஒரு யானையின் எடையில் 5% எடையளவு உணவு வழங்கப்பட வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள யானை வைத்தியத்தில் அனுபவமுள்ள மருத்துவரை (Veterinary Doctor) அணுகி அவர் பரிந்துரைக்கும் அளவிற்கு சமைக்கப்பட்ட சாதம், பருப்பு வகைகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் தேவையான அளவு தென்னை மட்டைகள், பச்சை புல் உணவாக கொடுக்கப்பட
வேண்டும். யானை பலகீனமாக இருப்பின் மருத்துவர் ஆலோசனைப்படி உணவின் அளவினை உயர்த்தி கொடுக்கலாம்.