மேலும் அறிய

Annamalai: விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?

பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில்  ஒருபோதும் தவெக இணையாது என அண்ணாமலை சூசகம்.

“கூட்டணியில் இருப்பதால் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்றால் திமுகவுடன் 5 ஆண்டுகள்  வரை பாஜக கூட்டணியில் இருந்ததே.. அப்போது திமுகவை பாஜக விழுங்கிவிட்டதா...?” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

2024 ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்வைத்து சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுவதாக பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை அவதூறு வழக்கு தொடர்ந்தருந்தார். அவதூறு வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று  ஆஜரானார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், “ஆர்.எஸ்.பாரதி மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கில் சாட்சியம் அளிக்க இன்று ஆஜரானேன். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி மரணத்தில் பாஜக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறினார். மன்னிப்பு கேட்க கோரி நோட்டீஸ் வழங்கினோம். ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டோம். கடந்த முறை டி.ஆர்.பாலுவை குறுக்கு விசாரணை செய்தபோது என் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். .அது குறித்து டி.ஆர்.பாலு மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். டி.ஆர். பாலு மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்முறையாக அவதூறு வழக்கு

யார் மீது வேண்டுமானாலும் அபாண்டமான அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது திமுக. பொது வாழ்க்கைக்கு சாமானியர்கள் வருவதை தடுக்க ஆர்.எஸ் .பாரதி போன்றவர்கள் மூலம் அவதூறுகளை பரப்புகிறது திமுக. யார் மீதும் அவதூறு வழக்கு தொடர கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. முதல் முறையாக ஆர்.எஸ்.பாரதி மீதுதான் அவதூறு வழக்கு தொடர்ந்தேன். ஆனால் கலிகாலத்தில் இதை செய்தால்தான் நியாயம் கிடைக்கும் போல.

முதலமைச்சர் போலி கண்ணீர்

பாஜக அதிமுகவை விழுங்கி வருவதாக  முதலமைச்சர் கூறியுள்ளார். அதிமுக விற்காக முதலமைச்சர் போலியாக கண்ணீர் வடிக்க வேண்டாம் . முதலமைச்சர் திமுகவிற்காக வேண்டுமானால் கண்ணீர் வடிக்கலாம். திமுகவை வீட்டிற்கு அனுப்ப மக்கள்  முடிவு செய்துவிட்டனர். மக்களை திசை திருப்ப முயல்கிறார் முதலமைச்சர். 1999 -2003 வரை திமுக பாஜக கூட்டணியில்  இருந்தது. அப்போது பாஜக திமுகவை விழுங்கியதா..?

 தேர்தல் காலத்தில் கூட்டணி வைப்பது இயல்புதான். கம்யூ , விசிகவை கூட்டணியில் இருப்பதால் திமுக  விழுங்கிவிடுமா...?, காங். திமுகவை விழுங்கி விடுமா..?. எங்கேயும்... எந்த கட்சியையும் நாங்கள் விழுங்கியதில்லை. நிதிஷ் குமார் , ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் குறைவான எம்எல்ஏக்களையே பெற்றிருருந்தும் பாஜக மூலம் முதலமைச்சர் ஆக்கப்பட்டனர்.

மக்கள் அச்சப்படத் தேவையில்லை

சவுதியில் இருந்தே நமக்கு பெரும்பாலும் எல்பிஜி வருகிறது. ஈரான் கடல் வழிகளை அடைத்துள்ளதால் அசாதாரண சூழல் நிலவுகிறது. மத்திய அரசு எல்பிஜியை சவுதியிடம் இருந்தே அதிகம் வாங்குகிறது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். வீடுகளுக்கு தேவையான எரிவாயு , பெட்ரோல் டீசல் இடையூறு இல்லமால் கிடைக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

2014 ல் 14 கோடி  குடும்பங்களிடம் இருந்த எரிவாயு இணைப்பு இப்போது 33 கோடியாக உயர்ந்துள்ளது. 60 சதவீதம் இறக்குமதி மூலமே பெட்ரோலிய சேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மத்திய அரசு கணிசமான அளவு பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட எரிவாயுவை இருப்பு வைத்துள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை.

விஜயுடன் கூட்டணியா?

விஜயுடன் அதிகாரபூர்வமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என நயினார் நாகேந்திரன் தொடர்ந்து கூறி  வருகிறார். டீயும் காபியும் ஒருபோதும் ஒன்றாக கலக்காது , காரணம் சித்தாந்தங்கள் வேறு. ஊடகங்கள் ஊகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். ஏஎன்எஸ். பிரசாத் மூத்த உறுப்பினர், நல்ல செய்தித் தொடர்பாளர். அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்று நாமாக எந்த முடிச்சும் போட வேண்டாம் , தேர்தலில் அவருக்கு வேறு வேறு பொறுப்புகள் அவருக்கு  வழங்கப்படும்

பிரதமரின் நாளைய திருச்சி வருகை திருப்புமுனை தரும.  நாடாளுமன்றத்தில் வளைகுடா போர் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டது. வெளியுறவு கொள்கை குறித்த நாடாளுமன்ற குழுவின் தலைமை பொறுப்பு காங். கட்சியை சேர்ந்த சசிதரூர் வசமே உள்ளது. எனவே ராகுல் காந்தி தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம்” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget