சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தையும், நண்பர்களுடன் 'சாட்' செய்யும் நேரத்தையும் நடைபயிற்சி, சைக்ளிங், ஸ்கிப்பிங் போன்ற உடற் பயிற்சிகளில் செலவிடலாம்.
படித்து முடித்தப்பின் நண்பர்களுடன் பேசிக் கொள்ளலாம். மேலும் தேர்வு முடியும் வரை கவனச் சிதறல் ஏற்படுத்தும் ஆப்'களை அலைபேசியிலிருந்து க்கி விடுவது சிறப்பு.
படிக்க உட்காரும் நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. படுத்துக் கொண்டோ அல்லது ஓய்வு எடுக்கும் வகையில் சாய்வாக உட்கார்ந்து கொண்டோ படிக்கக் கூடாது. நிமிர்ந்து உட்கார்ந்து சரியான நிலையில் படிக்கும்போது கை கால் வலியின்றி கூடுதல் கவனத்துடன் படிக்க முடியும்.
படிக்கும் பொழுது மொபைல் உள்ளிட்ட பொருட்களை அம்மாவிடம் கொடுத்து விட்டு படிக்க உட்காரலாம். இது போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் சிதறல்களை ஏற்படுத்தும்.
அமைதியாக ஓய்வு எடுக்கலாம். இந்த ஓய்வு மேலும் சில மணி நேரங்கள் உற்சாகத்துடன் படிக்க உதவும்.
வெளிச்சம் குறைவான இடமாக இருந்தால் நமது மூளை அதை தூங்கும் நேரம் என்ற சமிக்ஞையை கொடுத்துவிடும்.
படிக்கும் சூழ்நிலையையும் நேரத்தையும் சரியாக தேர்வு செய்து கொள்வது முக்கியம்.
கிரிக்கெட் போல 20:20 படிக்கும் நேரம் என்று வகுத்துக் கொள்ளலாம். அதாவது 20 நிமிடத் திற்கு ஒருமுறை சில நிமிடங்கள் ஓய்வு என பிரித்துக் கொள்ளலாம். இதனால் மூளை சோர்வடையாமல் இயங்கும்.
சரியான நேரத்தில் தூக்கம், உணவு, ஓய்வு என்று நேரத்தை வகைப் படுத்திக் கொண்டால் படிக்கும் பாடம் சிரமமாக இருக்காது.