Constitution Day: இன்று வது அரசியலமைப்பு தினம்.! அரசியலைப்பு என்றால் என்ன? மக்களுக்கு உள்ள உரிமைகள் என்ன ?
Constitution Day: நவம்பர் 26 ஆம் தேதியான இன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் நிலையில், இது சிறப்புக்குரிய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்நிலையில் இந்திய அரசியலைப்பு சட்டம் என்றால் என்ன? எதனால் இன்று அரசியலமைப்பு தினம், அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் குறித்தும் பார்ப்போம்.
அரசியலமைப்பு சட்டம் என்றால் என்ன?
அரசியலமைப்பு குறித்து எளிமையாக புரிந்து கொள்ள உதாரணத்திற்கு, கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொள்வோம். கிரிக்கெட் போட்டிக்கென விதிகள் உள்ளன, இந்த மைதானத்துக்குள் விளையாட வேண்டும், ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீச வேண்டும். மொத்தம் அணியில் 11 பேர் இருக்க வேண்டும். பேட் செய்பவர் அடிக்கும் பந்து எல்லை கோட்டை தாண்டி சென்றால் நான்கு ரன்கள், மைதானத்திற்குள் படாமல் எல்லையை பந்து தாண்டினால் 6 ரன்கள், பேட்டிங் செய்யும் போது பந்து வீசுகையில் ஸ்டம்பில் பந்து பட்டால் அவுட் மற்றும் ஆட்டத்தில் விதியை சரியாக நெறிப்படுத்த களத்தில் நடுவர்கள் என விதிகள் வகுத்து கிரிக்கெட் போட்டி நடைபெறும்.
கிரிக்கெட் விதிக்கு இருப்பது போன்றுதான் , நாட்டிற்கு அரசியலமைப்பு சட்டமும். ஒரு நாடு என்பது எது? அது எப்படி இயங்க வேண்டும்? யார் இயக்குபவர்கள்? மக்களுக்கு உள்ள உரிமைகள் என்ன? என விதிகள் வகுத்து இருப்பதுதான் அரசியலமைப்பு சட்டம்.
மூன்று அங்கங்கள்:
இந்திய அரசியலமைப்பு சட்டமானது மூன்று அங்கங்களான சட்ட இயற்றும் துறை( MLA,MP) , நிர்வாக துறை( Ministers, IAS..), நீதி துறை( Court ) ஆகியவை உள்ளன.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவானது மக்களாட்சி நாடு. அதாவது மக்கள்தான் மக்களை ஆட்சி செய்கின்றனர். மக்கள்தான் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, தங்களது வாக்குகள் மூலம் தேர்வு செய்கின்றனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் (எம்.எல்.ஏ, எம்.பி), மக்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றுகின்றனர். இயற்றப்பட்ட சட்டங்களை அரசு அதிகாரிகள் அதை செயல்படுத்துகின்றனர். இயற்றப்பட்ட சட்டம் முறையாக இயற்றப்பட்டு உள்ளதா? என்பதை நீதிமன்றம் கண்காணிக்கும்.
அதனால்தான் அரசு அங்கங்களாக மூன்றை சொல்வோம். .
அடிப்படை உரிமைகள்:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 6 அடிப்படை உரிமைகள் உள்ளன. இவற்றை அனுபவிப்பதில் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதில், நீங்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கே போகலாம் என மக்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது
1.சம உரிமை
2.சுதந்திர உரிமை
3.சுரண்டலை எதிர்க்கும் உரிமை
4.சமய சார்பு உரிமை
5.பண்பாடு மற்றும் கல்வி உரிமை
6.அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
மக்கள் சுதந்திரமாக செயல்படலாம், ஆனாலும் அவர்களுக்கு கட்டுப்பாடுகள், கடமைகள் உள்ளது என அதற்கான விதியையும் அரசியலமைப்பு கொண்டுள்ளது.
அரசியலமைப்பு தினம்:
இந்தியாவை , இங்கிலாந்து நாட்டவர் ஆட்சி செய்துபோது, இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு எடுத்தனர். அப்போது, இந்தியாவுக்கென, இந்தியர்களே உருவாக்கும் வகையிலான சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க, 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டமானது நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு தனி நாடு கோரிக்கை எழுந்ததால் முஸ்லீம் லீக் பங்கேற்கவில்லை மற்றும் மாகாண உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க டிச.9 1946 முதல் நவம்பர் 26, 1949 வரையிலான காலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, அவையால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான நவம்பர் 26 (1949) அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. பின்னர் ஜனவரி 26 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டமானது நடைமுறைக்கு வந்தது. அதனால், அந்த தினமே குடியரசு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நீடித்து நிலைக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம்:
பல நாடுகளில் இந்திய அரசியலைப்பு சட்டமானது, தோல்வியை சந்தித்த போதிலும், மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் அரசியலமைப்பு சட்டமானது, இன்றும் சிறப்பாக இயங்கி கொண்டிருப்பதற்கு, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய முன்னோர்கள், இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில், நமக்கு இருக்கக்கூடிய உரிமைகளை அனுபவிப்பது போல, நாட்டில் உள்ள கடமைகளையும் பின்பற்றி வளமான மற்றும் ஒற்றுமையான சமூகத்தை உருவாக்குவோம்.