மேலும் அறிய

சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய இபிஎஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஈரான் போர்- எரிவாயு தட்டுப்பாடு

ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமான போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து தான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதையடுத்து கச்சா எண்ணெய் இந்தாவிற்கு வருவது தடைப்பட்டுள்ளது. இதனால் எரிவாயு உற்பத்தி செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வணிக எரிவாயு கிடைக்காத காரணத்தால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் பாதிப்பு

தமிழகத்திலும் பல்வேறு ஓட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்ய எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.  இந்தநிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அம்மா உணவகங்கள் செயல்பட நடவடிக்கை எடுங்க..

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN ELECTION NOMINATIONS: ஒரே நாளில் 2,449 வேட்பு மனுக்கள் தள்ளுபடி.! யார் யார்.? கதிகலங்கிய அரசியல் கட்சிகள்
ஒரே நாளில் 2,449 வேட்பு மனுக்கள் தள்ளுபடி.! யார் யார்.? கதிகலங்கிய அரசியல் கட்சிகள்
புதுச்சேரியில் நாளை ஜனநாயகத் திருவிழா: 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
புதுச்சேரியில் நாளை ஜனநாயகத் திருவிழா: 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
Tamilnadu Round Up: 4994 வேட்பாளர்கள், நெல்லை & தூத்துக்குடியில் விஜய், அண்ணாமலை ஏன்? - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 4994 வேட்பாளர்கள், நெல்லை & தூத்துக்குடியில் விஜய், அண்ணாமலை ஏன்? - தமிழ்நாட்டில் இதுவரை
Holiday Special Bus : கொத்தாக வரும் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
கொத்தாக வரும் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை சொன்ன போக்குவரத்து கழகம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
Trump on Iran: அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
Top 10 News Headlines: “தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
“தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
Gold Rate Today : அடேங்கப்பா... ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா.! ஷாக் கொடுத்த வெள்ளி விலை- காரணம் என்ன.?
அடேங்கப்பா... ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா.! ஷாக் கொடுத்த வெள்ளி விலை- காரணம் என்ன.?
Embed widget