மேலும் அறிய

Kamal Haasan: ”முன்னோடியாக திகழும் இந்தியா.. இதயம் பெருமிதம் கொள்கிறது" - குடியரசு தின வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

குடியரசு தினம்:

இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடி மீது மலர்தூவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தமிழ்நாடு காவல்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

"இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது”

இதன்பின்னர் அண்ணா, கோட்டை அமீர், முதலமைச்சர் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், 75வது குடியரசு தினத்தையொட்டி, நடிகரும், மக்கள் நிதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ”மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது.  இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார்.  

எடப்பாடி பழனிசாமி: 

"ஜனநாயகத்தின் தாயகம் என்று சிறப்பிக்கப்படும், உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் நம் இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்ட இந்நன்னாளில், அரசியல் அமைப்புச் சாசனத்தின் அடிப்படை வேர்களான இன வேறுபாடற்ற மதச்சார்பற்ற சமுகமும், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்கவும், அமைதி, வளம், வளர்ச்சி ஓங்கப்பெற்று நாடு செழிக்கவும், நாட்டின் உயரிய வளர்ச்சிக்கும் அயராது பாடுபடுவோம் என உறுதியேற்பதுடன், அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
பெற்றோர்களே உஷார்: உதவித்தொகை அளிப்பதாக மோசடி செய்யும் கும்பல்- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பெற்றோர்களே உஷார்: உதவித்தொகை அளிப்பதாக மோசடி செய்யும் கும்பல்- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
Embed widget