மேலும் அறிய

vinayagar chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி: ஜாக்கிரதை: சிசிடிவி மட்டும் இல்ல; பறக்கும் கேமராவும் இருக்கு - டிஜிபி வெளியிட்ட அறிக்கை

விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி திருவிழா

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் இந்த விழாவானது நடப்பாண்டு புரட்டாசி மாத பிறப்பன்று வருவதால் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி விட்டு செய்யும் நாம் இந்த நன்னாளில் அவருக்கு பிடித்த கொழுக்கட்டை தொடங்கி அனைத்து உணவுகளையும் படைத்து வழிபடுவோம்.

இதேபோல் அனைத்து கோயில்களிலும் விநாயகர் சிலைகள் இன்று வைக்கப்பட்டு வார இறுதி நாளில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பணியில் 74 ஆயிரம் போலீசார்

அதில், “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் நிறுவும் நாளில் தமிழ்நாடு முழுவதும் 74,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் மற்றும் Mobile CCTV கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட காவலர்களால் தணிக்கை செய்யப்படும்.

மேலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் SMART KAVALAR செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு GPS உதவியுடன் ரோந்து காவலர்களால் தணிக்கை செய்யப்படும். விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கும் மற்றும் அவற்றினை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு நிலை ஆணை எண்.598, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை, நாள் 09.08.2018 ஆகியவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டப்படுகிறது.

முக்கிய விதிமுறைகள்

  • நிறுவப்பட இருக்கின்ற சிலைகள் களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்ட்ர் ஆப் பாரிஸ் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏற்கனவே வாங்கி நிறுவப்பட்ட சிலைகளை பொருத்தவரையில் அவற்றை  பொது நீர் நிலைகளில் கரைக்கக்கூடாது. இது தொடர்பாக
    W.P(MD).No.22892/2023 மற்றும் W.A(MD).No.1599/2023 ஆகியவற்றில்  சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில் நடந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
  • சிலையின் உயரம் பீடம் உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • சிலைகளானது வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவ மனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவப்பட கூடாது.
  • விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைப்பதை தவிர்த்திடல் வேண்டும்.
  • விழா அமைப்பினைச் சேர்ந்த இருவர் 24 மணி நேரமும் சிலைப்பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.
  • சிலைக் கரைப்பு ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் மட்டுமே எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
  • விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது மத துவேச கோஷங்களை எக்காரணத்தை முன்னிட்டும் எழுப்பக் கூடாது. 
  • ஒலிபெருக்கிகள் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.
  • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக காவல்துறை உதவி தலைவர். web ஒழுங்கு, சிறப்பு அதிகாரியாக (Nodal Officer) சட்டம் நியமிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி தொடர்பான விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு 044-28447701 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க: Vijay Vinayagar Statue: ப்ளடி ஸ்வீட்! விநாயகருக்கு டஃப் கொடுக்கும் லியோ விஜய் சிலை... விநாயகர் சதுர்த்தியில் அசத்தும் விஜய் ரசிகர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget