Vijay Vinayagar Statue: ப்ளடி ஸ்வீட்! விநாயகருக்கு டஃப் கொடுக்கும் லியோ விஜய் சிலை... விநாயகர் சதுர்த்தியில் அசத்தும் விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தை முன்னிட்டு சென்னை கொருக்குப்பேட்டையில் விஜய் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்பும், எந்தவொரு சுப நிகழ்ச்சிகளை தொடங்கும் முன்பும் அந்த காரியம் வெற்றியடைய விநாயகப் பெருமானை வணங்குவது ஐதீகம் ஆகும். பக்தர்களுக்கு சீரும், சிறப்பும் கொண்ட பெருமையான வாழ்வைத் தரும் விநாயகப் பெருமான் மிக எளிமையான கடவுளாக காட்சி தருகிறார். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) விநாயகர் சதுர்த்தி மிகவும் விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிப்படுவது வழக்கமான ஒன்றாகும். காலத்திற்கு ஏற்ப விதவிதமான வித்தியாசமான விநாயகர வடிவங்கள் இடம்பெரும். பாகுபலி விநாயகர், கொரோனா விநாயகர், இனிப்பால் செய்த விநாயகர், காய்கறிகளால் செய்த விநாயகர், நடனமாடும் விநாயகர் என வித்தியாசமாக மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரே பகுதியில் சேர்ந்தவர்களுக்கு கடும் போட்டி நிலவும். ஒரு சில இடங்களில் யார் சிறப்பான முறையில் சிலை வைத்திருக்கிறார்கள் என கணக்கிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஒரு சில காலனிகளில் எல்லா வீட்டிலும் இருக்கும் விநாய்கர் சிலையை பூஜைக்கு பின் ஒரே இடத்தில் வைத்து வழிப்படுவதும் வழக்கம் தான்.
நம் நாட்டில் சினிமாவுக்கு தனி மோகம் மக்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். சொல்லப்போனால் சினிமாவையும் மக்களையும் பிரிக்கவே முடியாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை சினிமாவுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளியாகும் திரைப்படம் அல்லது அந்த ஆண்டு மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைக்கப்படும். உதாரணத்திற்கு பாகுபலி திரைப்படம் வெளியான போது பாகுபலி பிள்ளையார் சிலை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றது. ரஜினிகாந்தின் எந்திரன், எந்திரன் 2.0 படங்கள் வெளியான போத பல இடங்களில் சிட்டி ரோபோ போல சிட்டி விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது. இப்படி வித்தியாசமாக யோசிப்பதில் நம் மக்கள் கெட்டிக்காரர்கள் தான். அந்த வகையில், விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ படம் அக். 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பட அப்டேட் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் எகிறி வருகின்றன.
இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் நடிகர் விஜய் விநாயகர் சிலை வைத்து அசத்தியுள்ளனர் ரசிகர்கள். சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கொருக்குப்பேட்டையில் வைக்கப்பட உள்ள விஜய் விநாயகர் சிலை, தற்பொழுது கவனத்தை ஈர்த்துள்ளது.
கல்கத்தாவிலிருந்து சிறப்பு கைவினைக் கலைஞர்கள் வரவழைக்கிப்பட்டு சிறந்த முறையில் விஜய் விநாயகர் சிலையும் மற்றும் விஜயுடன் வில்லன் இருக்கும் சுமார் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சிலைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
Vinayagar Chaturthi: களைகட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பக்தி பரவசத்தோடு பக்தர்கள் வழிபாடு