மேலும் அறிய
சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
’’ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜனவரி 17ஆம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவு’’
![சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை 2 roosters left to fight must be alive - Madurai Branch of the High Court சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/07/0deefa7e7719d2984f3ac12298b60f79_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேவல் சண்டை
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த தங்கமுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் உள்ள தாமஸ் நகரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த உள்ளோம். அரசு பிறப்பித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன் ஏற்பாடுகளுடன் சேவல் சண்டையை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜனவரி 16 ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
![சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/455712fc8d20a7ee0c32174a499f7565_original.jpg)
எனவே, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமஸ் நகர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 16ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் ஜனவரி 17-ஆம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி, சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்டவை கட்டக்கூடாது. சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்த கூடாது. சண்டைக்கு விடப்படும் இரண்டு சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும். எனக்குறிப்பிட்டு, ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜனவரி 17ஆம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion