மேலும் அறிய

EPS Case: எடப்பாடி பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை - மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல்

மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி இன்று சேலம் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர் மிலானி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழக்கினை விசாரித்த நீதிபதி கலைவாணி இந்த வழக்கு தொடர்பாக 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மத்திய குற்ற பிரிவினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுநல வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் மிலானிக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

EPS Case: எடப்பாடி பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை - மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல்

மேலும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 125A(1), 125A(ii), 125A(iii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

EPS Case: எடப்பாடி பழனிசாமி மீதான விசாரணை அறிக்கை - மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல்

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள், வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள், அவரது மனைவி வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் திரட்டி வந்தனர். அதே நேரத்தில் புகார்தாரரான மிலானியை காவல்துறையினர் முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் மே 26 ஆம் தேதி (இன்று) விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி இன்று சேலம் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். 

ஆனால் இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக எனது பெயரில் எந்த சொத்துக்களும் நான் வாங்கவில்லை. இந்த வழக்கு வேண்டுமென்றே போடப்பட்ட வழக்கு என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?

TNPSC Syllabus Change: தேர்வர்களே... குரூப் 1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம்? டிஎன்பிஎஸ்சி தகவல்

Thirupparankundram Hill: திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வெடித்த சர்ச்சை - 1931ல் நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா?
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வெடித்த சர்ச்சை - 1931ல் நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Repo Rate Changed: அப்படிபோடு..! 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் மாற்றம், குறையும் வட்டி, யாருக்கெல்லாம் பலன்?

ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK CouncillorTVK Issue : 60 லட்சம் மோசடி!தவெக நிர்வாகி மீது புகார்தலைவலியில் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
TNPSC Syllabus Change: தேர்வர்களே... குரூப் 1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம்? டிஎன்பிஎஸ்சி தகவல்
TNPSC Syllabus Change: தேர்வர்களே... குரூப் 1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம்? டிஎன்பிஎஸ்சி தகவல்
Thirupparankundram Hill: திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வெடித்த சர்ச்சை - 1931ல் நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா?
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வெடித்த சர்ச்சை - 1931ல் நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Repo Rate Changed: அப்படிபோடு..! 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் மாற்றம், குறையும் வட்டி, யாருக்கெல்லாம் பலன்?
Repo Rate Changed: அப்படிபோடு..! 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் மாற்றம், குறையும் வட்டி, யாருக்கெல்லாம் பலன்?
தொடங்கிய 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு; பள்ளிக் கல்வி இயக்குநர் நேரில் ஆய்வு!

Vidaamuyarchi Boxoffice: தி கோட் படத்தின் முதல் நாள் வசூல், மிஞ்சியதா அஜித்தின் விடாமுயற்சி? மொத்த வசூல் எத்தனை கோடிகள்?

Delhi Election 2025: மோடியின் 11 ஆண்டுகால ஏக்கம்..! நாடே கைவசம், தலைநகரம் மட்டும் எதிரிவசமா? டெல்லி கிடைக்குமா?

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பின்னர் அந்த நபர் செய்த காரியம்! வேலூரில் பரபரப்பு

Embed widget