"KKR, கங்குலி இடையேயான உறவு எப்போதும் சிறப்பாக இருந்தது இல்லை" முன்னாள் கிரிக்கெட் வீரர் பகீர்!
KKR மற்றும் சவுரவ் கங்குலி இடையேயான உறவு சிறப்பாக இருந்தது இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

JioHotstar-ல் பிரத்தியேகமாக வெளியாகியுள்ள ‘Power Play’ தொடரில் KKR அணியின் உரிமையாளர் ஷாருக் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சொப்ரா, ராபின் உத்தப்பா மற்றும் மன்விந்தர் பிஸ்லா, 2024 TATA IPL கோப்பையை கைப்பற்றிய KKR அணி மற்றும் அணிக்கு ஆலோசகராக திரும்பிய கெளதம் கம்பீர் குறித்து பேசினார்.
"எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத KKR"
JioHotstar-க்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில், KKR-க்கு மீண்டும் வந்த கெளதம் கம்பீரைப் பற்றிச் சொன்ன ஷாருக் கான்: "நான் ஒருபோதும் கெளதம் கம்பீர் எங்களை விட்டுச் சென்றதாக நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்குள் ஒரு அற்புதமான உறவு இருந்தது. சில வீரர்களுடன் நட்புறவு என்றும் தொடரும், கெளதம் கம்பீர் அத்தகையவர்களில் ஒருவர்" என்றார்.
KKR அணியின் கட்டமைப்பு பற்றி ஆகாஷ் சொப்ரா பகிர்ந்த கருத்து: "கெளதம் கம்பீர் மென்டராக திரும்பி, அணியை உருவாக்கும்போது, நான்கு முக்கியமான தூண்கள் அந்த அணியை நம்பிக்கையுடன் கட்டியெழுப்பின. முதல் தூண் - மிட்செல் ஸ்டார்க் மீதிருந்த அவரின் உறுதி.
இரண்டாவது - சுனில் நரீனை ஓப்பனராக முன்னிறுத்தியது. மூன்றாவது - ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அணியில் இணைத்தது. நான்காவது - இளம் வீரர்களில் முதலீடு செய்தது" என்றார்.
கெளதம் கம்பீர் இல்லாத காலத்தில் KKR சந்தித்த சவால்கள் குறித்து ராபின் உத்தப்பா கூறியது, "கெளதம் கம்பீர் இல்லாத பிறகு, KKR எங்கு போகும் என்று தெரியவில்லை. ஒரு சிறிய திசைமாறல் இருந்தது. ஒருவேளை அச்சமும் ஏற்பட்டு இருக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அணி எதிர்பார்த்த தரத்தில் செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. கெளதம் கம்பீர் திரும்புவதாக நான் கேள்விப்பட்டவுடன், அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது KKR-க்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று ட்வீட் செய்தேன்!" என்றார்.
மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்:
மென்டராக கெளதம் கம்பீர் - கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்! இந்த கூட்டணி வெற்றிக்கு எப்படி வழிவகுத்தது? என்பது பற்றி பேசிய ஆகாஷ் சொப்ரா, "கெளதம் கம்பீரை ஒரு சிறந்த மென்டராக மாற்ற, அவருக்கு ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற கேப்டன் தேவை.
கெளதம் எப்போதும் ஆழமாக ஈடுபட்டு, வீரர்களை தேர்ந்தெடுத்து, அணிக்காக ஒரு தெளிவான திசையை வகுத்தார். அதற்கு பூர்த்தியாக, கேப்டன் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும். கெளதம் எப்போதும் தீவிரமானவர். ஷ்ரேயாஸ் அமைதியாக இருப்பவர். ஆனால், இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்ததுதான் KKR-க்கு வெற்றியைத் தந்தது"
2011-ல் KKR-க்கு கெளதம் கம்பீரை கேப்டனாக கொண்டுவரும் தைரியமான முடிவு குறித்து அஜய் ஜடேஜா பகிர்ந்த கருத்து, "KKR மற்றும் சவுரவ் கங்குலி இடையே உறவு சிறப்பாக இருந்தது இல்லை. எனவே, 2011-ல் ஒரு பெரிய மாற்றம் நடந்தது. அதற்குமுன், KKR ஒரு விதத்தில் சவுரவ் கங்குலியின் அணியாகவே கருதப்பட்டது. ஆனால் 2011-க்கு பிறகு, அது ஷாருக் கானின் அணியாக மாறியது, கெளதம் கம்பீரின் தலைமையில்!"
கொல்கத்தா பற்றிய தனது முதல் உரையை நினைவுகூர்ந்த மன்விந்தர் பிஸ்லா, *"2011-ல் கொல்கத்தா வந்த கெளதம் கம்பீரின் முதல் உரையை நினைவுபடுத்திக் கொண்டால், அவர் கூறிய முதல் வார்த்தைகள் இவை: ‘நான் உங்கள் இரண்டாவது மகன். இது என் இரண்டாவது வீடு.
நான் ‘தாதா’ (சவுரவ் கங்குலி)வை மாற்றி வரவில்லை. நான் என் பெயரை உருவாக்க வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக கோப்பை வென்றிருக்காத கொல்கத்தா, வரவிருக்கும் காலங்களில் நீங்கள் வெற்றியை அனுபவிப்பதை உறுதி செய்யப்போகிறேன்!’”
JioHotstar-ல் ‘Power Play’ தொடரில் ஷாருக் கான், ஆகாஷ் சொப்ரா, ராபின் உத்தப்பா, அஜய் ஜடேஜா மற்றும் பலரின் பார்வைகளை கண்டுகளிக்க மறக்க வேண்டாம்!
முழு எபிசோடை பார்க்க: https://www.hotstar.com/in/sports/cricket/return-of-the-knights/1271396463/watch


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

