ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பின்னர் அந்த நபர் செய்த காரியம்! வேலூரில் பரபரப்பு
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எதிக்கட்சிகளும் தமிழக அரசை கடுமையாக சாடி வருகின்றன. காவல்துறை துரிதமாக செயல்படுவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றன. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை எனவும் திட்டமிட வில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல், ஆட்டோ டிரைவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் தொந்தரவு, ஆசிரியர்கள் பெண்களுக்கு கொடுக்கும் பாலியல் தொல்லை என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அந்த வகையில் தற்போது வேலூரிலும் இதுபோன்று பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, சித்தூருக்கு செல்ல கோவை – திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார் ஒரு நான்கு மாத கர்ப்பிணி பெண். அப்போது அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்ற அந்த பெண்ணிடம் அங்கிருந்த இரண்டு பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் பயந்து அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அந்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். கே.வி.குப்பம் அருகே அந்த பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டன.
தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் ஹேமராஜ் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காட்பாடி அருகே இறங்கி கே.வி.குப்பம் வழியே செல்லும்போது ஹேமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயிலில் இருந்து விழுந்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண்ணிடம் போலீசார் பல்வேறு நபர்களின் புகைப்படங்களை காட்டி அடையாளம் காண்பிக்க சொன்னார்கள். அப்போது ஹேமராஜ் என்பவரின் புகைப்படத்தை காட்டியபோது அந்த பெண் அடையாளம் காட்டினார்.
இந்த ஹேமராஜ் ஏற்கெனவே பெண்களிடம் சில்மிஷம் செய்து மாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

