Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK Councillor
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஒவ்வொருவரும் தனது பெயருக்கு பின்னால் அப்பா பெயரை போட்டு கொள்வார்கள். ஆனால் தனது பெயருக்கு பின்னால் பங்கஜம் என்கிற அம்மாவின் பெயரை போட்டு இருக்கும் காரணத்தை விளக்கியதும் அங்கிருந்தவர்களை நெகிழ செய்துள்ளது.
தஞ்சையில் மாவட்ட காவல் துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பெண் காவல் ஆய்வாளர்கள் பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவம், பாலியல் சீண்டல் குறித்த பாதுகாப்பு என பலவகையான விஷயங்களை விளக்கி கூறினர்.மேலும், மகளிர் காவல் நிலையம், சைபர் குற்றப்பிரிவு, தடயவியல் பிரிவு, மரபணு பரிசோதனை பிரிவு, கைரேகை பதிவு பிரிவு ஆகிய இடங்களுக்கு மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.பின்னர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய மாணவி ஒருவர். ஒவ்வொரு முறையும் மழை வரும் பொழுது தஞ்சாவூருக்கு லீவ் விடுவாங்களான்னு பார்த்துக்கிட்டே இருப்பேன் லீவுனதும் ரொம்ப சந்தோஷப்படுவேன். அடுத்த நாள் ஸ்கூல் போயிட்டு டெஸ்ட்க்கு படிக்கிறோமோ இல்லையோ நேற்று லீவுல என்ஜாய் பண்ணதை பத்தி பேசிப்போம். அந்த சந்தோஷத்திற்கு காரணமா இருந்தது கலெக்டர் மேடம் என்று மாணவி சொன்னதும் மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் வெட்கத்தில் தலை குனிந்து சிரித்தார்.
மாணவி கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஒவ்வொருவரும் தனது பெயருக்கு பின்னால் அப்பா பெயரை போட்டு கொள்வார்கள். ஆனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது பெயருக்கு பின்னால் பங்கஜம் என்கிற அம்மாவின் பெயரை போட்டு இருக்கும் காரணத்தை வெளிப்படுத்தினார்.





















