மேலும் அறிய

TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?

லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவியல் குறித்த ஃபெல்லோஷிப் படிப்புக்கு (Chevening Gurukul Fellowship for Leadership and Excellence) தேர்வாகி உள்ளார் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஃபெல்லோஷிப் படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளார். இதையடுத்து அடுத்த பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார். பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய அமைச்சரானதும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து என் மண், என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையைத் தொடங்கி நடத்தினார்.

தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். எனினும் தோல்வியே அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. எனினும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டினார்.

கட்சிக்கு உள்ளும் வெளியேயும் விமர்சனங்கள்

அண்ணாமலை தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளுக்கும் சரவெடி பேச்சுகளுக்கும் பெயர் போனவர். அதனாலேயே கட்சிக்கு உள்ளும் வெளியேயும் ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இதற்கிடையே பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜனுக்கும் அண்ணாமலைக்கும் மோதல் வெடித்ததாக செய்திகள் வெளியாகின.

சமூக வலைதளங்களில் சொந்தக் கட்சிக்காரர்களே விமர்சிப்பதாகவும் தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் மோசமாக விமர்சிப்பதாகவும் அவ்வாறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழிசை கூறி இருந்தார். இதற்கிடையே பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தமிழிசையைக் கண்டித்ததாக வீடியோ வைரலானது. எனினும் அண்ணாமலையும் தமிழிசையும் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவியல் குறித்த ஃபெல்லோஷிப் படிப்புக்கு (Chevening Gurukul Fellowship for Leadership and Excellence) தேர்வாகி உள்ளார் அண்ணாமலை. சுமார் 2.5 மாதங்கள் நடைபெறக் கூடிய இந்த ஃபெல்லோஷிப்புக்கு இந்தியா முழுவதும் இருந்து 12 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமே கவனித்துக்கொள்ளும். சர்வதேச தலைவர்களை உருவாக்குவதற்காக இந்த படிப்பு உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபெல்லோஷிப் படிப்பு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. இதற்கான விசா பணிகளும் முடிந்த நிலையில், ஆகஸ்ட் இறுதியில் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளார்.

TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?

அடுத்த பாஜக தலைவர் யார்?

இதற்கிடையே அண்ணாமலை படிக்கச் செல்வதால், அடுத்த பாஜக தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் தமிழிசை, அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், அவர் தற்காலிகமாக பொறுப்புத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இதுகுறித்து அண்ணாமலைக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’ஃபெல்லோஷிப் படிப்புக்காக இரண்டரை மாதங்கள் மட்டுமே லண்டன் செல்கிறார் அண்ணாமலை. அங்கிருந்தபடியே தனது பணிகளைத் தொடர்வார். வேறு தலைவர் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Embed widget