இந்த பும்ரா இருக்காரே... வீட்டிலும் தொடரும் கெட்ட கனவு.. புலம்பி தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
Mitchell Marsh : மிட்சேல் மார்ஷின் 4 வயது மருமகன் பும்ராவை போல பந்து வீச முயற்சித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

இந்தியா மற்றும்ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 முடிவடைந்த பிறகு, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் வீட்டில் எப்படி 'ஜஸ்பிரித் பும்ரா நைட்மேராக' தொடர்ந்தார் என்பதை மார்ஷ் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது விழாவில் பேசிய மார்ஷ் இந்த சம்பவத்தை வேடிக்கையாக நினைவு கூர்ந்தார். ஐந்து டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பும்ரா ஒரு கெட்ட கனவாக இருந்தார். பும்ரா இந்தத் தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
சிட்னியில் நடந்த 5 வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பந்து வீசவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் முறியடித்தார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் இழந்த போதிலும், பும்ரா தனது பந்துவீச்சுக்காக தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வீட்டிலும் பின் தொடர்ந்த பும்ரா:
தனது வீட்டின் பின்புறம் கிரிக்கெட்டை விளையாடி கொண்டிருந்தார் அப்போது அவரது 4 வயது மருமகன் பும்ராவை போல பந்து வீச முயற்சித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக மார்ஷ் தெரிவித்தார். இது குறித்து மார்ஷ் தெரிவித்ததாவது “என் மருமகன் டெட் நான்கு வயது ஆகிறது. நாங்கள் எங்கள் வீட்டின் பின்புறம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம், அப்போது என் மருமகன் டெட் (ஜஸ்பிரித் பும்ராவை போல பந்துவீசும் விதத்தில் என்னிடம் வந்தார், பும்ராவின் கெட்ட கனவு எனது வீட்டிலும் தொடர்ந்தது” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது விழாவில் மார்ஷ் நகைச்சுவையாக தெரிவித்தார் மார்ஷின் நேர்மையான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"The nightmare continued"
— cricket.com.au (@cricketcomau) February 3, 2025
Mitch Marsh on fire again at the #AusCricketAwards 😂 pic.twitter.com/KPBNSS1Urs
மிட்செல் மார்ஷின் மறக்க முடியாத டெஸ்ட் தொடர்
2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளில் பும்ராவால் மார்ஷ் மூன்று முறைஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டெஸ்ட் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்தார். ஏனெனில் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தனது பங்களிப்பை செய்யத் தவறினார். இந்த தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மார்ஷ் 73 ரன்கள் மட்டுமே எடுத்தார் மற்றும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.
மார்ஷ் தற்போது முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார், மேலும் அவர் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025ல் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.






















