மேலும் அறிய

Seeman - Vijay: ஆருயிர் தம்பிக்கு நன்றி! விஜய்க்கு சீமான் சொன்ன பதில்.. அப்ப 2026-இல் கூட்டணி உறுதியா?

திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 8% வாக்குகளை பெற்றிருப்பதால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 

மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு, சீமான் நன்றி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வென்றது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதேசமயம் திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 8% வாக்குகளை பெற்றிருப்பதால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வி என்றாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் வழக்கமான கரும்பு விவசாயி சின்னம் இல்லாமல் இம்முறை முதல் தடவையாக நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டும் வாக்கு வங்கி பெற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார். 

இதுவரை தேர்தல்களில் கூட்டணி வைக்காமல் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வருகிறது. அதேசமயம் விஜய்யின் அரசியல் வருகையை பெரும்பாலானோர் எதிர்த்த நிலையில் சீமான் முதல் ஆளாக வரவேற்றார். அதேசமயம் கட்சி கொள்கைகளோடு ஒத்துப்போனால் கூட்டணி வைக்கலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் சீமான், விஜய் இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget