Nam Tamilar party symbol: கரும்பு - விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக் கோர முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கமுடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கமுடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உங்களது கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை, இந்த நிலையில் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும் என நீதிபதி மன்மோகன் கேள்வி எழுப்பினார். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் , தேர்தல் ஆணையத்தை பரிசீலிக்க அறிவுறுத்த முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் தெரிவித்தார்.
கரும்பு விவசாயி சின்னம்:
நாம் தமிழர் கட்சி பயன்படுத்திவந்த கரும்பு-விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவிக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையம் விதிக்கும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், அதற்கு சில தனிச் சலுகைகள் தரப்படும். கட்சி சின்னம் கிடைப்பது தொடங்கி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்வது வரை பல சலுகைகள் கிடைக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்றால் என்ன?:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்றால், மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன், அந்தத் தேர்தலில் குறைந்தது 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது, அம்மாநிலத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.
அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஏதாவது ஒரு தகுதியை பூர்த்தி செய்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக செயல்படலாம்.
வழக்கு ஒத்திவைப்பு:
இந்நிலையில், கரும்பு விவ்சாயி சின்னத்தை ஒதுக்குமாறு, நாம் தமிழர் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை, இந்த நிலையில் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும் என நீதிபதி மன்மோகன் கேள்வி எழுப்பினார். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் , தேர்தல் ஆணையத்தை பரிசீலிக்க அறிவுறுத்தவும் முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் தெரிவித்தார்.
உங்களுக்கு இந்த சின்னம், லக் இல்லை என்பது போல் தெரிகிறது; எனவே மாற்றிவிடுங்கள் என தெரிவித்த நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.