Tamilnadu Election 2024: அனைத்து தேர்தலிலும் வெற்றி.. முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டிய கமல்ஹாசன்!
திமுகவின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
40 தொகுதிகளிலும் வென்ற திமுக கூட்டணி:
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.
வெற்றியை குவிக்கும் ஸ்டாலின்:
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! @mkstalin @CMOTamilnadu @Udhaystalin #ElectionsResults #India #TamilNadu #Victory pic.twitter.com/Tz3puzXD0D
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2024
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Mayiladuthurai Lok Sabha Election Results 2024: மக்களவைத் தேர்தல் - வெற்றியை உறுதி செய்த காங்கிரஸின் சுதா!