மேலும் அறிய
வேங்கைவயல் விவாகரத்தில் காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
வேங்கை வயல் விவாகரத்தில் விரிவான விசாரணை செய்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது - சிபிசிஐடி தரப்பு வாதம்

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
வேங்கை வயல் விவாகரத்தில் சிபிசிஐடி தரப்பின் வாதத்தை ஏற்று மனுதாரர் போராட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வேங்கைவயல் தொடர்பான மனு
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு..,” கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால் விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தேன் அனுமதி மறுத்து காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது. எனவே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும் எனக் கூறி இருந்தார்.
நீதிபதி முன் விசாரணை
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. வேங்கைவயல் விவகாரம் சாதிய மோதல் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்சனையே இது போன்று நடந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து விசாரணை நீதிமன்றத்தில் தற்போது குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார் மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரனை மேற்கொண்டுள்ளனர். 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள எண்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
எனவே இந்த விவகாரத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் திறன் பட விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடித்து நீதிபதி நிர்மல் குமார் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நிர்மல் குமார். வேங்கைவயல் விவகாரத்தில் மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது சரியே காவல்துறையின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆயிரம் சொல்லுங்க.. 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் - செல்லூர் ராஜூ உறுதி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார் அவ்வளவு தான் - ஷாக் கொடுத்த டிடிவி தினகரன் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
அரசியல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
Advertisement
Advertisement





















