மேலும் அறிய

Madurai Lok Sabha Election Results 2024:Madurai Lok Sabha Election Results 2024:மதுரை மக்களவைத் தொகுதி - வெற்றியை உறுதி செய்த சு.வெங்கடேசன்!

Madurai Election Results 2024: மதுரையில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது இவர் 4,30,323 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். 

கடந்த 3 சுற்றுக்களாக அதிமுகவை முந்தும் பாஜக:

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான 4 மற்றும் 5ஆம் , 6 ஆகிய மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவை விட பாஜக கூடுதலான வாக்குகள் பெற்றுள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை - 4 ,5, 6 ஆகிய 3 சுற்றுகளில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் 6006 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். 

இதுவரை 6 சுற்றுக்களின் முடிவில் அதிமுக இரண்டாம் இடத்தில் 71,886 வாக்குகளும், பாஜக 65, 387 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில் கடந்த 3 சுற்றுகளாக பாஜக அதிமுகவை விட கூடுதலான வாக்குகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதி 32: 5ஆம் சுற்று முடிவு 

சிபிஎம் சு. வெங்கடேசன் - 1,15,439
அதிமுக டாக்டர் சரவணன் - 63,196
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 52,229
நாம் தமிழர் சத்யா தேவி -26,208

சிபிஎம் சு.வெங்கடேசன் 5ஆம்சுற்று முடிவில் 52,243 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

மதுரை மக்களவைத் தொகுதி முதல் சுற்று நிலவரப்படி....

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை வடக்கு மற்றும் மத்தியம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலை வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேலூர் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வைப்பதாக கூறப்படுகிறது. 

தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 8 மேஜைகளில் தபால்வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், 6590 வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

ROUND - 1 (UPDATE ) முன்னிலை

CPI(M) - 1184
ADMK - 708
BJP.     - 376
NTK.     - 179

மக்களவைத் தேர்தல் 2024:

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரையில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மக்களவை தொகுதி எப்போது உருவானது..? 

தூங்கா நகரம், கோயில் நகரம் என்று உலக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவோடு மக்களவை தேர்தலும் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. அரசியலில் ஆரம்பித்து  பண்பாட்டு, கலை என கலக்கும் தலைநகராக மதுரை விளங்குகிறது. அரசியல் வாழ்வியலோடு உலக நாடுகளே வியக்கும் அளவிற்கு தொல்நகரங்களில் மதுரையும் ஒன்று என்று அறிஞர்கள் கூறுகின்றன. அதனால்தான் மதுரையின் வரலாறு என்பது, தமிழ் மக்களின் வாழ்வியலோடு வாழ்க்கையுடனும் கலந்ததாகவே பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வரலாறுகளை கொண்ட, மதுரை மக்களவை தொகுதி வரலாறு 1952-ம் ஆண்டு உருவானது.

வேட்பாளர்கள் யார் யார் களத்தில்..? 

ஏப்ரல் 19ம் தேதி மதுரையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு. வெங்கடேசனும், பாஜக சார்பில் ராம சீனிவாசனும், அதிமுக சார்பில் டாக்டர் சரவணனும், நாம் தமிழர் சார்பில் சத்யா தேவியும் களத்தில் உள்ளனர். இதுபோக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.ராமர்பாண்டி, 12 சுயேச்சைகள் என 21 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 

மதுரை மக்களவை தொகுதியை பொறுத்தவரை, கம்யூனிஸ்ட், பாஜகம் அதிமுக, நாம் தமிழர் என 4 வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளராக பார்க்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் தான் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படுகிறது. 

இதுவரை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார் யார்..? 

மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம் என நகருக்குள்ளேயே 5 தொகுதிகளும், புறநகரில் மேலூர் என 6 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை. இதுவரை நடந்த 17 மக்களவை தேர்தல்களில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் 8 முறையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 முறையும் வாகை சூடியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, தமாக, பாஜக கட்சி தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. 1957-ல் கே.டி.கே தங்கமணி, 1967ல்  பி.ராமமூர்த்தியும், பி.மோகன் 2 முறையும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சு.வெங்கடேசன் என மொத்தமாக 5  முறை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

எத்தனை வாக்காளர்கள்..? 

மதுரையில் மொத்தமாக 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் - 7,77,145, பெண்கள் - 8,04,928, மூன்றாம் பாலினத்தவர்கள் - 198 பேர்கள் உள்ளனர். அதில் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் 9,81,650 பேர் மட்டுமே ஆகும். அதில், ஆண்கள் - 4,85,989, பெண்கள் - 4,95,607, மூன்றாம் பாலினத்தவர்கள் - 54 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம், 64.04% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
Embed widget