மேலும் அறிய

DMK MPs Meeting : ”நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்” நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர் இவரா..?

"நாடாளுமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி திமுகவிற்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது”

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையவிருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.DMK MPs Meeting : ”நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்” நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர் இவரா..?

நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்

இந்நிலையில், புதிதாக வெற்றி பெற்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக தலைமை அலுவலகமாக அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

கடந்த முறையை காட்டிலும் இண்டியா கூட்டணி கட்சி சார்பில் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளதால், இம்முறை நாடாளுமன்றத்தில் அவ்வளவு எளிதாக எந்த ஒரு மசோதாவையும் பாஜக அரசால்- நிறைவேற்றிவிட முடியாது என்ற நிலை உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நாளை கூட்டப்பட்டிருக்கிறது.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் யார் ?

அதே நேரத்தில் புதிதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவரையும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கவுள்ளனர். தற்போதைய குழ் தலைவராக திமுகவின் பொருளாளராக உள்ள டி.ஆர்பாலு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள எம்.பிக்கள் கூட்டத்திலும் டி.ஆர்.பாலுவே திமுக நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.

கட்சி எம்.பிக்களை வழிநடத்த மூத்த தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவாலேயே முடியும் என்பதாலும் அவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும், 6-வது முறையாக நாடளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பழுத்த அனுபவம் இருப்பதாலும் அவரையே இந்த முறையும் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.DMK MPs Meeting : ”நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்” நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர் இவரா..?

துணைத் தலைவராகும் கனிமொழி கருணாநிதி

அதே மாதிரி மக்களையின் திமுக உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராக தூத்துக்குடி எம்.பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். நீலகிரி எம்.பியான ஆ.ராசா திமுக மக்களை உறுப்பினர் குழுவின் கொறடாவாக நாளைய கூட்டத்தில் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கொறடா பொறுப்பை பெற இந்த முறை அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆகிறாரா டி.ஆர்.பாலு ?

அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரை இண்டியா கூட்டணி கட்சிகள் இன்னும் தேர்வு செய்யாத நிலையில், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியே எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லாதப்பட்சத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளை வென்றுள்ள திமுகவிற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்படி கொடுக்கப்பட்டால், எதிர்க்கட்சி துணைத் தலைவராக டி.ஆர்.பாலுவே இருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

முதல் கூட்டத் தொடரில் பலத்தை காட்ட திட்டம்

கடந்த 2019 தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது. எனவே, பிரதமராக மோடி பதவியேற்ற பின் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத்திலேயே திமுக தன்னுடைய பலத்தை காட்ட ‘நீட் தேர்வை’ ரத்து செய்ய வேண்டும் என்ற முழத்துடன் நாடாளுமன்றத்தில் பிரச்னையை கிளப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அது குறித்தும் நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Embed widget