Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் தடை; எங்கெல்லாம் கரெண்ட் இருக்காது..?
Mayiladuthurai Power Shutdown 12.11.24 : மயிலாடுதுறை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (12.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.
சமூகநீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகர்வர்களை பார்க்கிறேன் - அமைச்சர் மெய்யநாதன்
செய்தி குறிப்பு
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் பாலையூர், துணைமின் நிலையத்தில் 12.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பாலையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்,
Electric Car Sales: எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை படுஜோர்.! இப்போ, எந்த நிறுவனம் டாப் தெரியுமா?
மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்
பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, கோமல், தேரழுந்தூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, சேன்டிருப்பு, வில்லியநல்லூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பேராவூர், பழையகூடலூர், டி-பண்டாரவாடை, கொக்கூர். பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆத்தூர், எடக்குடி, பாலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
Burnout Syndrome: வாழ்க்கையே சலிப்பா இருக்கா..! வேலை போர் அடிக்குதா? உங்க பிரச்னை இதுதான்..!