மேலும் அறிய

இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!

காசிக்கு இணையான புதன் தலம் திருவெண்காட்டில் புகழ்பெற்ற இந்திரப் பெருவிழா தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருள, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ துர்கா ஸ்டாலின் வடம்பிடித்த இழுத்தார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு வடம் பிடிக்க, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

மூர்த்தியும் தீர்த்தமும் மூன்றாய் அமைந்த தலம்

காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுவது திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இங்கு இறைவன் சுவேதாரண்யேஸ்வரராகவும், இறைவி பிரம்ம வித்யாம்பிகையாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இங்கு சுவாமி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் என அனைத்தும் மூன்றாக (சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள்) அமைந்துள்ளன. மேலும், இது நவகிரகங்களில் கல்வி மற்றும் அறிவுக்கு அதிபதியான புதன் பகவானுக்குரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

திருவிழா பின்னணி மற்றும் கொடியேற்றம்

இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 12 நாட்கள் நடைபெறும் 'இந்திரப் பெருவிழா' மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி கொடி மரத்திற்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷப முத்திரை பொறிக்கப்பட்ட கொடி ஏற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தொடர்ந்து வந்த நாட்களில், சுவாமி மற்றும் அம்பாளுக்குப் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சகோபுர தரிசனம் மற்றும் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று, பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

கோலாகலமான தேரோட்டம்

திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்வான தேரோட்டம் இன்று காலை சுப முகூர்த்தத்தில் தொடங்கியது. முன்னதாக, அதிகாலையிலேயே விநாயகர், முருகப்பெருமான் (வள்ளி-தெய்வானையுடன்), பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட ஐந்து தனித்தனி தேர்களில் சுவாமிகள் எழுந்தருளினர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேங்காய் உடைத்து, திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். இவருடன் சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள், கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பக்தர்களின் பரவசம்

தேரோட்டத்தைக் காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்தனர். அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் அசைந்து வரும் காட்சியைக் கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தபோது, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்துச் சுவாமியை வழிபட்டனர். மேள தாளங்கள் முழங்க, சிவனடியார்களின் ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாடல்களைப் பாடி வர, தேரோட்டம் களைகட்டியது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தேர் நிலையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் நிறைவுப் பகுதியாக தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget