Soori Birthday: இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்: ஸ்பெஷல் பரிசு கொடுத்த சூரி ரசிகர்கள்
நடிகர் சூரி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் தங்க மோதிரங்கள் அணிவித்து பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர் மன்றத்தினர்.
![Soori Birthday: இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்: ஸ்பெஷல் பரிசு கொடுத்த சூரி ரசிகர்கள் Suri fans celebrated their birthdays by wearing 2 gram gold rings to all children born today Soori Birthday: இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்: ஸ்பெஷல் பரிசு கொடுத்த சூரி ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/27/77e1f94c6d5c3322ff9e183f2edc6b3e1693143435967184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்து விடுதலை படம் மூலம் ஹீரோவாக கதையின் நாயகனாகவு பரிமாற்றம் பெற்ற நடிகர் சூரி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த சூரி, சிறிய சிறிய வேடங்களில் நடித்து வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் பரோட்டா சாப்பிடும் காட்சியில் அனைவரையும் கவர்ந்து பரோட்டா சூரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா உலகில் நகைச்சுவை நடிகரா இருந்தாலும், ரியல் லைப்ல சூரி ஒரு ரியல் ஹீரோவாக தான் வலம் வருகிறார். பல்வேறு இடங்களிலும் உதவி செய்துவருகிறார். கொரோனா சமயத்தில் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
![Soori Birthday: இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள்: ஸ்பெஷல் பரிசு கொடுத்த சூரி ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/27/abac335a249bf49685bcdf6aa385d1d21693142906128184_original.jpeg)
அதே போல் சூரி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவ்வப்போது மதுரையில் ஆதரவற்றோர்களை அழைத்துச் சென்று பராமரித்தல், மாநகரின் குப்பை பகுதிகளை தூய்மைப்படுத்துதல் போன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூரியன் 46வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று மகப்பேறு பிரிவில் பிறந்த அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் மதிப்பிலான தங்க மோதிரத்தையும், லட்டு இனிப்புகள் வழங்கியும் சூரி பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் ஆனது வழங்கப்பட்ட உள்ளது, காலையிலிருந்து மாலை வரை 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சூரி நற்பணி மன்ற அகில இந்திய தலைவர் ஆதிசுவரன் , நடிகர் சூரியின் உடன் பிறந்த இரட்டை சகோதரர் லக்ஷ்மணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சூரி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டரை கிராம் தங்க மோதிரங்கள் அணிவித்து பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர் மன்றத்தினர் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Soori Birthday: சிறப்பு குழந்தைகளுக்கான குரல் தேடல் இசை நிகழ்ச்சி; வீடியோ காலில் உற்சாகமூட்டிய சூரி
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Train Fire Accident: மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள்.. பிடித்து பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)