மேலும் அறிய
Advertisement
தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி - மைசூர், செந்தூர், கொல்லம் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் பெட்டிகளை இணைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1. மைசூரிலிருந்து நவம்பர் 1 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை புறப்படும் வண்டி எண் 06236 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயிலிலும், தூத்துக்குடியிலிருந்து நவம்பர் 2 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை புறப்படும் வண்டி எண் 06235 தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயிலிலும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
2. சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06105 சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரயிலிலும் திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 7ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06106 திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் செந்தூர் சிறப்பு ரயிலிலும் திருநெல்வேலி ரயில் நிலையம் வரை ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
மேலும் தீபாவளி முன்னிட்டு இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் குறித்த செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அலைமோதும் கூட்டம்: பண்டிகை கால சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
3. சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில் செங்கோட்டை ரயில் நிலையம் வரை ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
இது குறித்து ரயில் நிர்வாகம் கூறுகையில், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் கூடுதல் பெட்டிகள் மற்றும் படுக்கை வசதிகள் இணைப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இதனால் மக்களின் சிரமங்களை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
*Diwali Special Trains | தென்மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் ! மகிழ்ச்சியில் மக்கள் -* https://t.co/p4A7GlCFTR
— Arunchinna (@iamarunchinna) November 2, 2021
இதை படிக்க் மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...! - மதுரை மாவட்ட மக்களுக்கு நடிகை சினேகா வேண்டுகோள்...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion