மேலும் அறிய
Advertisement
அலைமோதும் கூட்டம்: பண்டிகை கால சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்க சில சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
1. வண்டி எண் 02694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையும் மற்றும் வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 10 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
2. வண்டி எண் 02633 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 8 வரையும் மற்றும் வண்டி எண் 02634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 9 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
3. வண்டி எண் 02206 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரையும் மற்றும் வண்டி எண் 02205 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
4. வண்டி எண் 06851 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரையும் மற்றும் வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 3 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
5. வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரையும் மற்றும் வண்டி எண் 06724 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
6. நவம்பர் 2ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06618 கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து நவம்பர் 3ஆம் தேதியன்று புறப்படும் வண்டி எண் 06617 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion