மேலும் அறிய

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!

பணியிடமாறுதலா 365 கோடி, அரசுப்பணிகள் 900 கோடி, ஒப்பந்தக்கள் 1000 கோடி, மணல் திருட்டில் 4700 கோடி, டாஸ்மாக் மோசடி 40 ஆயிரம் கோடி மோசடி. திமுக அமைச்சர்களுக்க மோசடி செய்வதில்தான் போட்டா போட்டி உள்ளது.

காங்கிரசை தமிழ்நாடு 60 ஆண்டுகள் விலக்கியது. காங்கிரசிடமிருந்து விடுதலைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. இதனால் வஞ்சத்துடன் கச்சத்தீவை தாரை வார்த்தது. - பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி
 
மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற தே.ஜ.கூ., சார்பில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில்..,” மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி உரையை தொடங்குகிறேன். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்று வணங்கினேன். தெய்வீக அனுபவம். தமிழ்நாடு மற்றும் ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சிக்காக வேண்டினேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்து எனது இரங்கலைத் தெரிவித்தேன். திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மை காரணமாக இந்த கொடுமை நிகழ்ந்தது. நிச்சயமாக வாய்மையே வெல்லும்.
 
லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் அவதிப்பட வேண்டும். 
 
2021இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் இவர்கள் மக்களைக் கொள்ளையடித்தார்களே தவிர, நல்ல ஆட்சியைக் கொடுக்கவில்லை. பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மதுரையை உயிருக்கு உயிராக நேசித்த எம்ஜிஆருக்கு உறுதுணையாக நின்றது மதுரை மாநகரம். திமுகவுக்கு மதுரை என்றால் வேப்பங்காயாக உள்ளது. திமுகதான் மதுரையில் மாஃபியா அரசியலை அறிமுகம் செய்தார்கள். சுத்தம், சுகாதாரம், தூய்மையில் மதுரையைக் கீழே கொண்டு சென்றுவிட்டார்கள். பணம் நமக்கு, பிரச்னை என்றால் மக்களுக்கு என்பதுதான் இவர்களின் மாடல். ஏழைகளுக்கு தாங்களுக்கும் பணியாற்ற விடமாட்டார்கள். பிரதம மந்தி ஊரகப் பகுதி வீட்டு வசதித்திட்டம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், 3 லட்சம் வீடுகள் முடிக்கப்படாமல் உள்ளன. திமுக அரசு அதற்குரிய கள ஆய்வை மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கிறது. இதனால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் அவதிப்பட வேண்டும். 
 
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்
 
தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம். இங்கே அளவில்லாத வாய்ப்புகள் உள்ளன. காங்கிரசும் திமுகவும் 2014 ஆண்டுக்கு முன்னால் கூட்டணி ஆட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். 2014 ஆண்டிற்குப் பிறகு சென்னை துறைமுகம்-மதுரவாயல் திட்டத்தைத் செயல்படுத்தினோம். காமராஜர் துறைமுகத்தை அதிக திறன் வாய்ந்ததாக மாற்றினோம். சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் பொருளாதார வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசுகிறார்களே, இவர்கள் மத்தியல் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லையே ஏன்?
 
கூப்பாடு போடுகிறார்கள்.
 
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் 2004-2015 முதல் ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவும் என்ன செய்தார்கள்? அங்கு ரயில்கள் மட்டும் மெதுவாகச் செல்லவில்லை. அவர்களது கோப்புகளும்தான். பாம்பன் பாலத்தை நவீனமயமாக்கி இன்று திறந்து வைத்தது இன்றைய மத்திய அரசுதான். இன்றைக்கு அந்தப் பாலத்தில் மிக விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும். 2009-2014ஆம் ஆண்டு ரயில்வே நிதி வெறும் 880 கோடி ரூபாய்தான் காங்கிரஸ்-திமுக ஆட்சியில். 2026-2027இல் 7600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 8 மடங்கு அதிகம். மாநிலத்திற்கு நல்லது செய்ய முடிந்த காலத்தில் காங்கிரஸ்-திமுக செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு கூப்பாடு போடுகிறார்கள்.
 
மதுபானத்தால் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன.
 
தமிழ்நாடு மிகப் பெரும் பிரச்னைகளில் உள்ளது. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போதைப்பொருள்கள் அதிகரித்துள்ளன. மதுபானத்தால் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. ஜெயலலிதா ஆட்சியின்போது, தங்களுடைய வாழ்க்கை எத்தனை சிறப்பானதாக இருந்தது என்பதை பெண்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். நாங்கள் பதவிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம். குற்றவாளிகளும் போதைப் பொருள் மாஃபியாக்கள் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். உங்களுடைய பாதுகாப்பு, கண்ணியம், அதிகாரப் பரவலாக்கத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யும்.
 
திமுக குறித்து அடுக்கிய மோடி
 
பணியிடமாறுதலா 365 கோடி, அரசுப்பணிகள் 900 கோடி, ஒப்பந்தக்கள் 1000 கோடி, மணல் திருட்டில் 4700 கோடி, டாஸ்மாக் மோசடி 40 ஆயிரம் கோடி மோசடி. திமுக அமைச்சர்களுக்க மோசடி செய்வதில்தான் போட்டா போட்டி உள்ளது. ஏழைகளிடம், விவசாயிகளிடமிருந்துதான் இந்த மோசடியைச் செய்கிறார்கள். அதனால் தேசிய ஜனநயாகக் கூட்டணியைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். தூய்மையான திறமையான அரசை நாங்கள் கொண்டு வருவோம்.
 
திமுக ஒன்றும் செய்யவில்லை
 
காங்கிரசை தமிழ்நாடு 60 ஆண்டுகள் விலக்கியது. காங்கிரசிடமிருந்து விடுதலைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. இதனால் வஞ்சத்துடன் கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனை எதிர்த்து திமுக ஒன்றும் செய்யவில்லை. திமுக அவர்களுக்கு ஆதரவளித்தபோது, ஜல்லிக்கட்டை தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. அதனைத் தொடரச் செய்து அவசரத் சட்டத்தை கொணர்ந்தது நாம்தான். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழக கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.” என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?

Embed widget