மேலும் அறிய

IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!

T20 WC 2026 IND vs WI: டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 196 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

டி20 உலகக்கோப்பையில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சூப்பர் 8 போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிக்குச் செல்லும் என்ற நிலையில், இரு அணிகளும் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு களமிறங்கியது.

196 ரன்கள் டார்கெட்:

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாய் ஹோப் நிதானமாக ஆடி அவுட்டாக, சேஸ் 40 ரன்களும், ஹெட்மயர்  27 ரன்களும் எடுக்க கடைசியில் ஹோல்டர் 37 ரன்களும், பவெல் 34  ரன்களும் எடுக்க இந்தியாவிற்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஏமாற்றிய அபிஷேக், இஷான்:

கடினமான இலக்கு, வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணிக்கு சாம்சன் அதிரடி தொடக்கம் அளித்தார். அபிஷேக் சர்மா 2 பவுண்டரிகள் விளாசினாலும் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த வேகத்தில் இஷான் கிஷன் 10 ரன்களுக்கு அவுட்டாக, சூர்யகுமார் யாதவ் சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

அசத்திய சாம்சன்:

கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்ட சாம்சன் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் இந்தியா ரன் எடுத்தது. அபாரமாக ஆடிய சாம்சன் அரைசதம் விளாச, மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டாக, 11வது ஓவரில் 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், சாம்சனுடன் அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா அதிரடியாக ஆடினார். கடைசி 7 ஓவர்களில் 75 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்குத் தேவைப்பட்டது. இந்த ஜோடியைப் பிரிக்க கேப்டன் சேஸ் சுழல் தாக்குதல் நடத்தினார். ஆனால், இவர்கள் அதிரடியாகவே ஆடினார்கள். தொடர்ந்து அதிரடியாக ஆடிய திலக் வர்மா 15 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

5 ஓவர்களில் 50 ரன்கள் தேவை:

அடுத்து ஹர்திக் பாண்ட்யா சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. பதட்டமின்றி இந்த ஜோடி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பியது. இதனால், பந்துகளும் இலக்கும் சமமான அளவிற்கு வந்தது. 24 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது பாண்ட்யா கைக்கே கொடுத்த கேட்ச்சை ஹோல்டர் தவறவிட்டார்.

கடைசியில் சாம்சன் பவுண்டரிகளை விளாச ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வந்தது. 14 பந்துகளில் 19 ரன்களே தேவைப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக பாண்ட்யா 19வது ஓவரில் அவுட்டானார். அவர் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த ஷிவம் துபே முதல் பந்தையே பவுண்டரி விளாச இந்தியா வெற்றிக்கு 7 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஸ்லோ ஓவர் பெனால்டி விதிக்கப்பட்டது. இதனால், வெளியில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டனர். சாம்சன் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்ப இந்தியாவிற்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாச இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட்டு வெளியேறியது. சாம்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 50 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்ஸருடன் 97 ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget