மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்.. கச்சக்குடா ரயில் சேவை நீட்டிப்பு- முழு தகவல்கள் உள்ளே
ரயில்வே நீட்டிப்பு குறித்த செய்திகள் குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள தகவல்கள் உள்ளே.
நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் சேவை நீட்டிப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சக்குடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் கச்சக்குடா - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (07435) பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில்இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் நாகர்கோவில் - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் (07436) பிப்ரவரி 4 முதல் மார்ச் 31 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.