கொக்குக்கு இந்த அக்கப்போரு... கிரிக்கெட் மட்டையால் அடித்து கொல்லப்பட்ட மெக்கானிக்...!
மரத்தில் இளைஞர்கள் சிலர் நேற்று முன் தினம் கொக்கு பிடிப்பதற்காக வந்து உள்ளனர். இதைப் பார்த்த ராமமூர்த்தி அவர்களிடம், இங்கு கொக்கு பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கொட்ட குடி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு வயது 38. டி.வி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: மகாராஷ்ட்ரா விவகாரத்தில் கடத்தியதாக கூறிய எம்.எல்.ஏ.. படங்களை வெளியிட்ட எதிர் அணி..
நேற்று முன் தினம் அழகாபுரி கிராமத்தில் உள்ள தனது உறவினரான முத்துசெல்வி(37) என்பவரின் வீட்டிற்கு இவர் சென்றி இருந்தார்.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
அவரது வீட்டின் முன்னால் புளியமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் இளைஞர்கள் சிலர் நேற்று முன் தினம் கொக்கு பிடிப்பதற்காக வந்து உள்ளனர். இதைப் பார்த்த ராமமூர்த்தி அவர்களிடம், இங்கு கொக்கு பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த இளைஞர்கள், ராமமூர்த்தியை கிரிக்கெட் மட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அழகா புரியை சேர்ந்த பொய்யா மொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொக்கு பிடிக்கும் தகராறில் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொல்லப்பட்டிருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இம்மாதிரியான கொலை சம்பவங்களை தடுக்கஅரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நொடி பொழுதில் ஏற்படும் கோபம், வாழ்க்கை முழுவதும் நம்மை இன்னலுக்கு உள்ளாக்குகிறது. இதை அனைவரும் புரிந்து காெள்ள வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்