மேலும் அறிய
Advertisement
பணத்தை தொலைத்து அலைந்த தம்பதி; கண்டெடுத்ததை ஒப்படைத்த அண்ணன், தங்கை!
கண்கலங்கியபடி தனது பணத்தை தேடி அலைந்த முதியவரிடம், 16 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த ஊர்காவல்படை வீரரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
மதுரை வரிச்சூர் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவர் அஞ்சல்துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இதனால் மாதம், மாதம் தனது பென்சன் பணத்தை பெற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று தபால் நிலையத்திலிருந்து தனது ஓய்வூதிய தொகையான 16ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். இதையடுத்து தபால் நிலையம் முன்பாக அமர்ந்துவிட்டு சென்றபோது தனது 16-ஆயிரம் ரூபாய் பணத்தை கீழே தவறவிட்டுள்ளார்.
இங்கே சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இதனையடுத்து பணத்தை தொலைத்த பதட்டத்தில் அந்த பகுதி முழுவதிலும் தனது மனைவியுடன் சேர்ந்து தேடிவந்தார். இந்நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ஊர்காவல்படை காவலரான புரோஸ்கான் மற்றும் அவரது சகோதரி ஜாஹிரா பானு ஆகிய இருவரும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இலவச வீடு தர கோரி மனு அளிப்பதற்காக வந்த நிலையில் தபால் நிலைய அருகே கீழே கிடந்த 16 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் நீதிபாலனிடம் பணத்தை வழங்கியுள்ளனர்.
மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!
இதனையடுத்து பணம் கிடந்த பகுதியில் காவல்துறை விசாரணை நடத்தியபோது முதியவர்கள் பணத்தை தொலைத்துவிட்டு தேடி வந்ததை கண்டுபிடித்து அவரிடம் 16ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். இதையடுத்து முதியவர்கள் தொலைத்த பணத்தை ஒப்படைத்தவர்களை காவல்துறையினர் பாராட்டினர். இதனையடுத்து பணத்தை தொலைத்த முதியவர் பணத்தை எடுத்துகொடுத்த நபரிடம் இருவருக்கும் காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தொலைத்த பணத்தை எடுத்து கொடுத்த ஊர்காவல்படை காவலரின் மனிதாபிமான செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி சென்றனர்.
இது குறித்து முதியவர் குருநாதன் நம்மிடம்....,” இந்த பதினாறு ஆயிரம் தான் இந்த மாசம் செலவுக்கு பூரா ஓடும். பணம் தொலைஞ்சத நினைச்சு நொந்து போய்டேன். கடவுள் மாதிரி என்ட பணத்த திறுப்பி கொடுத்துட்டாங்க. பணம் கிடைச்ச பின்னாடியும் என் கண்ணு கலங்குது” என்று நெகிழ்ந்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion