மேலும் அறிய

Madurai : ஒரு கோடி இலக்கு.. மரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொறியாளார்.. மதுரையில் மியாவாக்கி காடுகள்

1 கோடி மரங்களை இலக்காக கொண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகளை தற்போது வரை நட்டு, மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகளை உருவாக்கி முன்னெடுத்து வரும் கட்டிட பொறியாளருக்கு குவியும் பாராட்டு.

ஒரு கோடி மரம் நடும் இலக்கில் ஒரு லட்சம் மரங்களை நடவு செய்து அனைவரின் பாராட்டையும் மதுரை பொறியாளர் பெற்றுள்ளார்.

மியாவாக்கி

உலகம் முழுவதும் ‘மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகளை உருவாக்கும் முறைக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த முறையில் மரங்கள் வேகமாக வளர்கின்றன. குறுகிய இடத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் குறுங்காடுகளை விரைவாக உருவாக்க முடிகிறது. ஜப்பானை சேர்ந்த அகிரா மியாவாக்கி என்பவர்தான் இம்முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். எனவே, இந்த குறுங்காடு வளர்ப்பு முறைக்கு அவரது பெயரிலேயே ‘மியாவாக்கி’ என்று அழைக்கப்படுகிறது.
 
கடவுள் நமக்களித்த அரிய படைப்புதான் மரம். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், மரங்களை பாதுகாக்க யாரும் ஆர்வம் கொள்ளவதில்லை. அதனை பாதுகாக்க வேண்டிய மனிதர்களே கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால், பூமியை காக்க மரங்களின் காதலனாக மாறி இருக்கிறார், மதுரையை சேர்ந்த என்ஜினீயர் சோழன் குபேந்திரன். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை சுற்றுவட்டார பகுதியில் மரங்களை நட்டு வருகிறார். மேலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியும் வருகிறார்.

ஒரு கோடி இலக்கு:

"இயற்கைக்கு நாம் சிறு உதவி செய்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனை திரும்பி தரும்" என்று கூறும் குபேந்திரன். 2012-ம் ஆண்டில், கல்லூரி படித்து முடித்த பின்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாயிலாக மரக்கன்றுகளை நடுவதின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதலில் வீட்டை சுற்றி இருந்த காலி இடங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்தேன். அதில் ஏற்பட்ட ஆர்வ மிகுதியால் மரக்கன்றுகளை மற்றவர்களுக்கும் இலவசமாக வழங்க தொடங்கினேன். திருமண வீடுகளுக்கு, மண்டபங்களுக்கு சென்று மரத்தை பற்றியும், இயற்கையை பற்றியும் எடுத்துரைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். ஒரு கோடி இலக்கில் தற்போது ஒரு லட்சம் மரங்களை நடவு செய்து தனது முதல் இலக்கினை அடைந்துள்ளதாக பெருமிதம் கொள்கிறார். 
 
வருடத்திற்கு ஒரு லட்சம் இலக்கு நிர்ணயத்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை வெளியில் இருந்து மரங்களை வாங்கி நட்டு வந்தேன் தற்போது மதுரை தெற்குபெத்தாம்பட்டி பகுதியில் ஐந்து ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு எடுத்து அங்கு விதைகள் மூலம் நாட்டு மரங்களை வளர செய்து அதனை சாலையில் நட்டு வருகிறோம். சாலை ஓரங்களில் நடும் மரங்கள் 15 க்கும் மேற்பட்ட வகைகளைச் சார்ந்த நாட்டு மரங்கள்.
கடம்பமரம், பன்னீர் மரம், ஆலமரம், பூவரது, அரசமரம், புங்கை மரம், மகாகனி மரம், அத்தி மரங்கள், பலாமரம், நாவல் மரங்கள், கொடிக்காய் மரம், இலந்தை மரம், மகிழம், மருதம், இலுப்பை, ஐந்திலை பாலை, ஏழிலை பாலை, மலை வேம்பு, வாகை மரம், மஞ்சள் சரக்கொன்றை மரங்கள் போன்ற மர வகைகளையும் நாட்டு வைக்கிறோம்.
 
நாட்டு மரங்கள் அவசியம்

நம் நாட்டு மர வகைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து அந்த மரக்கன்றுகளை மட்டுமே நட்டு வைத்துள்ளோம். ஒரு காலத்தில் பசுமையாக இருந்த மதுரை தற்போது அதீத மாசு படிந்து மழையின்றி காணப்படுகிறது. மேலும்
சாலைகளின் இரு புறங்களிலும் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றிருக்கிறோம். மதுரையை முற்றிலும் ஆக பசுமையாக மாற்ற வேண்டும் என்பது நோக்கம். மதுரை - அழகர்கோவில் சாலை, விரகனூர்- ரிங்ரோடு சாலை, அய்யர்பங்களா சாலை என மாவட்டத்தின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் நாட்டு வகை மரக்கன்றுகள் நட்டுள்ளோம். மதுரையில் உள்ள 390 அரசு பள்ளிகளுக்கும், 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வழங்கி வருகிறோம். 

அப்துல் கலாம் ரோல் மாடல்:

இந்த பணியை செய்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்துல்கலாம் தான் என்னுடைய ரோல் மாடல். அவர் மேடைகளில் எல்லாம் இயற்கையை பற்றியும், மரங்களை பற்றியும் பேசுவார். அந்த பேச்சுகள் மூலம் ஈர்க்கப்பட்டு தான் நானும் மரக்கன்றுகள் நட தொடங்கினேன். 2015-ல் அப்துல் கலாம் இறந்த பின்பு மரங்கள் நடுவதை முழுநேர பணியாக மாற்றினேன். எவ்வளவு சம்பாதித்தாலும்  பாதியை மரங்களுக்காக செலவிட நினைத்தேன். இதற்காக என்னுடைய சொந்த செலவில் ரூ. 4½ லட்சம் செலவில் பழைய தண்ணீர் லாரியை வாங்கி அதன் மூலம் தினம் தினம் தண்ணீர் ஊற்றி வருகிறேன். மரங்களை பராமரிக்க என்னுடன் பணியாற்றும் 8 பணியாளர்களை நியமித்துள்ளார். இந்நிலையில் குபேந்திரன்  மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் மியாவாக்கி முறையில் குறுக்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இன்று பத்தாயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து தனது ஒரு கோடி மரம் நடும் இலக்கில் ஒரு லட்சம் மரங்களை நடவு செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Embed widget