மேலும் அறிய
மதுரை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 141 கிராம் இதன் மதிப்பு 7,19,382 லட்சம் ரூபாய் என கண்டறியப்பட்டது.

கடத்தல் தங்கம்
துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடமிருந்து 141 கிராம் எடையுள்ள 7 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது
#மதுரை விமான நிலையத்தில் ரூ.7லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
— arunchinna (@arunreporter92) October 20, 2022
Further reports to follow -@abpnadu
| @aaimduairport | @MaduraiAirport | #madurai | #airport | #gold | @ramnellai | @LPRABHAKARANPR3 |. pic.twitter.com/OV4GquxeFG
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையம் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: பால் கொள்முதல் விலையில் ரூ.10 உயர்த்தி வழங்குங்கள்; மாடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
அப்போது இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டியன் என்ற பயணியிடம் இருந்து ட்ரில்லிங் மிஷின் கீ எனப்படும் கருவியில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் மற்றும் அலைன் கீ எனப்படும் நவீன ஸ்பானரில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது. விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 141 கிராம் இதன் மதிப்பு 7,19,382 லட்சம் ரூபாய் என கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து பயணியிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்





















