மேலும் அறிய
Madurai ; வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும் - செல்லூர் ராஜு சாபம் !
விஜய் உடன் ஆன கூட்டணி கொடுத்த கேள்விக்கு மக்கள் கூட்டணியை வைத்து வாக்களிக்க மாட்டார்கள் என செல்லூர் ராஜூ பேட்டி

செல்லூர் ராஜு
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போதும்; கமல்ஹாசனின் டார்ச் லைட்டை திமுக பிடுங்கிவிட்டது - செல்லூர் ராஜு.
செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சம்பத்து பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு...,”
மதுரையை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அதிமுக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை என்ற சு.வெங்கடேசனின் கருத்து குறித்த கேள்விக்கு.
ஒரு பொய்யை மறைப்பதற்கு 9 பொய் சொல்வார்கள். இது சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானம் கிடையாது. இது மத்திய அரசின் கீழ் வருகிறது. சுற்றுச்சாலை அமைத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அண்டர்பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பூர்விகா பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்த 2 மாதத்தில் மதுரை விமான நிலைய சுற்றுச்சாலையில் உள்ள இடத்தில் அண்டர் பாஸ் அமைக்கப்படும் என நிதி அமைச்சராக இருந்த PTR பழனிவேல் தியாகராஜன் சொல்லி இருந்தார் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
மத்திய அரசு எரிபொருள் சேமிக்காதது தான் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ற சு.வெங்கடேசனின் கருத்துக்கு
சிலிண்டர் தட்டுப்பாடு நிச்சயமாக இருக்காது. செயற்கையாக முறையில் பதுக்கினார்கள் என்றால் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சொல்லியுள்ளார். பிரதமர் மோடிஜி தமிழகத்தில் சிலிண்டரால் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்கு தான் அவருடைய எண்ணம். இதுவரையில் பாதிக்கவில்லை.
சசிகலா புதிய கட்சி பெயர் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு
அது எல்லாம் கேட்காதீர்கள் வேறு கேள்வி கேளுங்கள்.
NDA கூட்டணி கட்சிகள் வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் உள்ள எல்லா வருவாய் மாவட்டங்களிலும் திமுக அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளார்கள். மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிறார்.
ஏனென்றால் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதலமைச்சர்.
சுக்கிர திசை எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். டார்ச் லைட்டை திமுக புடுங்கிவிட்டது. கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில் கொதித்து எழுந்துள்ளார், என்ன சமூக நீதி? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை இருக்கின்றது என்றும் மிகவும் மோசமாக உள்ளது என்று ஒரு பத்திரிகையில் வந்துள்ளது. மற்றொரு பக்கம் தமிழ்நாடு முன்னேறுகிறது என்று சொல்லி முதல்வர் விளம்பரப்படுத்தி உள்ளார். விளம்பரத்தில் தான் திமுக அரசு முன்னேறி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை போல பார்க்கவில்லை. உன்னை போல பார்க்கவில்லை என்று ஒரு பாட்டு உள்ளது.. பேப்பரை திறந்தாலே அவருடைய படம்தான் உள்ளது. இதில் எங்கே மக்களை காக்க போகிறீர்கள்? தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினோம். சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கமல்ஹாசன் இவ்வளவு பொறுமையாக இருந்து உள்ளார் என்பதை பாருங்கள். திமுக ஆட்சி அமைந்த உடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று கனிமொழி தெரிவித்தார்.
ஆனால் அவருடைய நாடாளுமன்ற தொகுதியிலேயே நேற்றைய தினம் இறந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க சென்றபோது துரத்தி விட்டார்கள்.ஏன் போதை ஆசாமிகளை பிடிக்க மாட்டீர்களா? என்பது ஒரு டவுட்டாக உள்ளது. திமுக ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால கூட தமிழக மக்களை காப்பாற்ற முடியாது. இளைஞர்களே கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார் ஆனால் போதை புழக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக தான் தமிழகம் உள்ளது.
NDA கூட்டணியில் விஜய் வந்தால் கூட்டணி வலு பெறுமா?
மக்கள் கூட்டணியை வைத்து வாக்களிப்பவர்கள் கிடையாது. ஒரு ஆட்சியின் நன்மை தீமைகளை ஆராய்வார்கள்.
நான் நல்லது செய்தால் தான் மக்கள் ஓட்டு எனக்கு போடுவார்கள் இல்லையென்றால் செல்லூர் ராஜு கிளம்பி போ, என்று சொல்லிவிடுவார்கள். மக்களுக்கு அரசாங்கம் நல்லது செய்திருந்தால் இவ்வளவு விளம்பரம் தேவை இல்லை. முன்பு உடை வெண்மையாக வேண்டுமா பளிச்சென்று வேண்டுமா? ஏரியல் பயன்படுத்துங்கள் என டிவியில் விளம்பரம் செய்தார்கள். இப்போது எதை எடுத்தாலும் முதலமைச்சர் விளம்பரமா தான் உள்ளது
திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்ற நடிகர் வடிவேலுவின் கருத்துக்கு
வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும். 2011ம் ஆண்டு வடிவேலு புயலாக கிளம்பினார். குஷ்பூ ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் புறப்பட்டார் பார்த்தால் என் தொகுதியில் வந்து பேசினார். ஜெயந்திபுரத்தில் பெரிய கூட்டம் இருந்தது. நானே அவ்வளவுதான் என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது வைகைப்புலின் ராசி அப்படி என்று. வடிவேலுக்கு உள் மனதில் திமுக வரக்கூடாது என்று இருக்கும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















