மதுரை: பால் கொள்முதல் விலையில் ரூ.10 உயர்த்தி வழங்குங்கள்; மாடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி கரவை மாடுகளுடன் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது
தமிழகம் முழுவதும் ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பால் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பால் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய தயிர், நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ள சூழலில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தப்படவில்லை எனவும், கடந்த 4 ஆண்டுகளாக பாலின் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை முன் வைத்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி கிராமங்களில் அடுத்தடுத்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி கரவை மாடுகளுடன் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது. இதையடுத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
— arunchinna (@arunreporter92) October 19, 2022
Further reports to follow - @abpnadu #madurai #usilampatti pic.twitter.com/NPhnDHBVmB
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்