'கடனுதவி அளித்ததால் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்கி 2026 அக்டோபருக்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்'- மதுரை எம்.பி !
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக ஜெய்கா நிறுவனம் கடனுதவி அளித்ததால் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்கி 2026 அக்டோபருக்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவது பற்றி நான் நாடாளுமன்றத்தில் விதி எண் 377-இன் கீழ் எழுப்பி இருந்தேன். அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் மற்றும் ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல செயலாளரிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. டிசம்பர் 2018-இல் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான ஒப்புதல் தரப்பட்டது. 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப்பிரிவு ஒன்றை துவக்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ 1264 கோடியில் இருந்து ரூ 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
#மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக ஜெய்கா நிறுவனம் கடனுதவி அளித்ததால் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்கி 2026 அக்டோபருக்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி#AIIMS | @SuVe4Madurai | #madurai | @SRajaJourno | #Hospitality
— Arunchinna (@iamarunchinna) May 5, 2022
மதுரை எய்ம்ஸ் பற்றி நாடாளுமன்றத்தில் விதி 377 ன் கீழ் நான் எழுப்பிய பிரச்சனைக்கு அமைச்சர் பதில்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 5, 2022
மொத்த தேவையான ரூ 1977.8 0 கோடிகளில் ஜெய்கா கடன் ரூ 1627.7 கோடி. மீதம் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
92 சதவீத முன் முதலீட்டு பணி நிறைவு.
2026 அக் பணிகள் முடிவுறும். pic.twitter.com/TAOJ0GQwJX