மேலும் அறிய

TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!

தவெக தலைவர் விஜய் தன்னிடம் இருந்து விவாகரத்து கோரிய தனது மனைவி சங்கீதாவிற்கு ரூபாய் 250 கோடி வரை ஜீவனாம்சமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் தவெக தலைவர் விஜய். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய்யுடன் இதுவரை கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வராத நிலையில், தவெக-வினர் இந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்க்கு பின்னடைவைத் தந்த விவாகரத்து: 

கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியை உருவாக்கிய நிலையில், தற்போது மிகப்பெரிய பின்னடைவாக அவருக்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் அமைந்துள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

விஜய்யின் மிகப்பெரிய பலமே பெண்கள் வாக்குகளே ஆகும். அதிகளவு பெண் ரசிகைகளை கொண்ட அவருக்கு பெண் வாக்குகள் குவியும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தால் அவருக்கு பெண்கள் மத்தியிலே மிகப்பெரிய அதிருப்தி உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க தவெக முக்கிய தலைவர்கள் விஜய்யிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

250 கோடி ரூபாய் ஜீவனாம்சம்:

இதன் காரணமாக, விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கும், தங்களது மகன் மற்றும் மகளின் வாழ்வாதாரம் கருதி ஜீவனாம்சமாக ரூபாய் 250 கோடி வரை வழங்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார ரீதியாக விஜய் சங்கீதாவை கட்டுப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு விஜய்யின் செல்வாக்கிற்கு களங்கமாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாக வழங்க விஜய் தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமூகமாக முடிக்க விருப்பம்:

இந்த விவகாரத்தை சுமூகமாக முடிப்பதற்காக சங்கீதா தரப்பினரிடம் பேச்சுவார்த்தை விவாகரத்து மனுவைத் திரும்ப பெற வைக்கவும் தவெக முக்கிய தலைவர்கள் விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

விஜய் - சங்கீதாவின் தனிப்பட்ட வாழ்க்கையாக இது இருந்தாலும், தற்போது அரசியல் தலைவராக விஜய் இருப்பதால் தவெக எனும் கட்சியின் எதிர்காலம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால், இந்த விவாகரத்து விவகாரத்தை சுமூகமாக முடிக்கவே தவெக நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விஜய் மீது எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காவிட்டாலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் முன்வைத்து வருகின்றனர்.

நாளை என்ன பேசப்போகிறார்?

இந்த சூழலில், விஜய் நாளை தஞ்சையில் நடக்க உள்ள தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால், அவரது பேச்சை தமிழ்நாடும், அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளது. 

வேட்பாளர்கள் தேர்வு, பரப்புரை ஆகியவற்றில் தவெக-வினர் இன்னும் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளனர். விஜய் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தனது பரப்புரையை அடுத்தடுத்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget