மேலும் அறிய

மதுரை: கி.பி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு..!

இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரை வீரன் மற்றும் போர் வீரர்களின்  நினைவைப் போற்றும் வகையில் இந்த நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களை தியாகிகளாக போற்றிய பண்பாடாக தமிழர் பண்பாடு உள்ளது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'  என்றார். வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு.

மதுரை: கி.பி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு..!
 
இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறது.  இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் விவசாய நிலத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான குதிரை வீரன் சிற்பம் மற்றும் போர் வீரன் சிற்பம்  கண்டறியப்பட்டுள்ளன. முனைவர் முனீஸ்வரன், இலட்சுமண மூர்த்தி, ஆதி பெருமாள்சாமி ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது தனியார் விவசாய நிலத்தில் தனிப்பலகைக் கல்லில் கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் மற்றும் போர் வீரன்  நடுகற்கள்  கண்டறியப்பட்டன.

இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது: பேரையூர் மொட்டமலை அருகே தனியார் விவசாய நிலத்தில் தனிப்பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. குதிரை வீரன் நடுகல் 6 அடி உயரம், 3 அடி அகலமும் கொண்டுள்ளது. நடுகல்லில்  வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாய்ந்து செல்கின்ற குதிரையும் அதில் அமர்ந்து ஈட்டியை ஓங்கிப் பிடித்துள்ள வீரனும் , நம்முடைய கண்ணையும் , கருத்தையும் கவர்கின்றனர். வீரனின் இறுகிய காலும் , ஒட்டிய வயிறும் , விரிந்த மார்பும் ,  காலில் அணிந்துள்ள கழலும் , வீரன் இடுப்பிலுள்ள  குறுவாளும் அவன் ஒரு வீரன் என்பதை பறை சாற்றுகின்றன. வளர்ந்த காதுகளும் , சிறிய கொண்டையும்  அன்றைய நாகரிகத்தை சொல்லுகின்றன. வீரனின் கண்களில் தெரியும் உறுதியும் அதற்கு இணையாக குதிரையின் கண்களில் தெரியும் உறுதியும் எதிரிகளை மிரட்டுகின்றன. குதிரையின் மேலே விரிக்கப்பட்டுள்ள சேனத்தின் எளிமையான அலங்காரம் நம்மை வசீகரிக்கின்றன. குதிரையின் புடைத்த காதும் மேலே தூங்கிய வாலும் குதிரை செல்லும் வேகத்தை நமக்கு உணர்த்துகின்றன. குதிரை வீரனுக்குப் பின்னர் மூன்று பெண்கள் வரிசையாக நிற்கின்றனர். முதலில் நிற்கும் பெண் கையில் செண்டு ஏந்தியிருப்பதால் வீரனின் மனைவி என்றும்,  உடன்கட்டை ஏறியவள் என்றும் அறிய முடிகிறது. மற்ற இருவரும் பணிப் பெண்கள்,  நடுவிலுள்ள  பெண் அரச சின்னத்தை இரு கைகளினால் ஏந்தி கொண்டு நிற்கின்றாள். கடைசியிலுள்ள பெண் ஒரு கையை இடுப்பில் தாங்கி மறு கையால் கவரி வீசுகின்றாள். மனைவி மட்டும் பாதம் வரை ஆடை அணிந்திருப்பதும்,  பணிப்பெண்கள் கால் முட்டி வரை மட்டுமே ஆடை அனிந்திருப்பதும் கவனிக்கத்தக்கவை. ஆனால் மூன்று பேருமே மார்பில் கச்சு அனிந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . 
 
மதுரை: கி.பி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு..!
 
போர் வீரன் சிற்பம்
 
குதிரை வீரன் சிற்பம் அருகில் உள்ள போர்வீரனின் புடைப்புச் சிற்பம் 3 அடி உயரம் 2 அடி அகலமும் கொண்டுள்ளது. வீரன் இடுப்பில் குறுவாளுடனும், வலது கையில் உயர்த்திய வாளுடன், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடன் நின்றவாறு காட்சி தருகிறான்.  இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரை வீரன் மற்றும் போர் வீரர்களின்  நினைவைப் போற்றும் வகையில் இந்த நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு சிற்பங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன.  தற்போது  சில குறிப்பிட்ட இன மக்கள்  குல தெய்வமாக இந்த நடுகற்களை  வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகற்கள்  ஹொய்சாளர் கலைப்பாணியில் அமைந்துள்ளதால்  கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget