காரைக்குடி : 35 ஆண்டுகால மயானப் பாதை பிரச்சினை..ஒரே நாளில் தீர்வு வழங்கிய வட்டாட்சியர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 35 ஆண்டுகால மயானப் பாதை பிரச்சினைக்கு வட்டாட்சியர் நடவடிக்கையால் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டதால் உயிரிழந்தவரை மாற்று பாதையில் எடுத்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 35 ஆண்டுகால மயானப் பாதை பிரச்சினைக்கு வட்டாட்சியர் நடவடிக்கையால் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டதால் உயிரிழந்தவரை மாற்று பாதையில் எடுத்துச் சென்றனர்.
காரைக்குடி அருகே களத்தூர் ஊராட்சி, தட்டாகுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இறந்தவரை மயானத்திற்கு கொண்டு செல்ல கால்வாயை பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை பயன்படுத்த இட உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இப்பிரச்சினை 35 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் அக்கிராமத்தில் சக்திவேல் (65) என்ற விவசாயி உயிரிழந்தார்.
அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் இரு தரப்பிடம் விசாரனை செய்து பேச்சுவார்த்தை நடத்தினார் இறுதியில் அரசு இடத்தில் தற்காலிக பாதையை ஏற்படுத்தி இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்தார்.மேலும் அந்த பாதையில் நிரந்தர சாலை அமைக்கவும் உத்தரவிட்டார். நீண்ட நேர பிரச்சனைக்கு பிறகு இறந்தவர் உடலை வட்டாச்சியர் கூறிய பாதையில் எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர். இதன் மூலம் 35 ஆண்டுகளாக இருந்த மயானப் பாதை பிரச்சினைக்கு வட்டாச்சியர் நடவடிக்கையால் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்