மேலும் அறிய

'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !

வசதியான வீட்டில் பிறந்த தங்கச்சாமி, அதையெல்லாம் விட்டுட்டு நாய்களின் சமாதிக்கு நடுவே குடியிருந்து வருகிறார்.

”ஐயோ.... என் தங்கத்த காணோமே... டேய் செவல எங்கடா போன” - கூன் தள்ளிய முதியவர் காளையார்கோயில் பகுதியில் கண்ணீர்விட்டுக் கதறிய சத்தம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தான் வளர்த்த நாய்க்கு வைத்தியம் பார்க்க வந்த 77 வயது முதியவரின் நாய் மருத்துவமனைக் கூட்டத்தை பார்த்து தெறித்து ஓடியுள்ளது.  நாய் பாதித்தின்ற பொறையை வைத்துக்கொண்டு தன் நாயை, இல்லை இல்லை, அவரின் செல்லத்தை தேடித் திரிந்துள்ளார். ஒருவாரம் பசியும் பட்டினியுமாய் திரிந்தது தான் மிச்சம். தனது நாய்க்குட்டி கிடைக்கவில்லை. ஒருவழியாய் மனதைத் தேற்றிக்கொண்டு வீடு திரும்பிய தங்கச்சாமி ஐயாவுக்கு வழியில் புதிய சொந்தம் ஒன்று கிடைத்துள்ளது.
 
என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அடுத்த சித்தத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கச்சாமி. முழு ஊரடங்கு காலத்திலும் தான் வளர்த்த நாய்க்கு அடிபட்டுள்ளது என காளையார்கோயில் கால்நடை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளார். அப்போது மிரண்டு ஓடிய நாய் அவரிடம் வந்து சேரவில்லை. அவர் அந்த நாயை தேடியது குறித்து காளையார்கோயில் பகுதி நண்பர்கள் விளக்கியது கேட்கவே கடினமாக இருந்தது. இந்நிலையில் அவரின் விபரம் கேட்டு சித்தத்தூர் கிராமத்திற்கு சென்றோம். ஊருக்கு வெளியே புதர்கள் நிறைந்த 5-க்கு, ஏழு அளவிலான எளிய வீட்டில் அமர்ந்திருந்தார் தங்கச்சாமி.

என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
உயிர் வேலிகளால் அடைத்ததுபோல் அவரது புதர்கள் நிறைந்த காம்பவுண்டு இருந்தது. அதற்கு இடையில் நாய்கள் எளிமையாக சென்றுவரும். உள்ளே நுழையும்  முன் தங்கச்சாமி "சாமிகளா செருப்ப கழட்டி வச்சுட்டு வாங்க என் பிள்ளைகள் எல்லாம் இங்க தான் தூங்குதுக" என்று ஆச்ச்ரியத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு பேச்சுக் கொடுத்தோம். "சரிதா, ஸ்ரீ தேவி, துரைச்சாமி, மாதா, நல்லம்மா, வெள்ளச்சி, ராமர், கண்ணாடி கருப்பி, தங்க மீனானு..., ஏகப்பட்ட செல்லங்கள வளத்தே. அதுக எல்லாமே ஒவ்வொன்னா செத்துப் போச்சுக" என்று கண்ணீர் வடித்து தழுதழுத்த குரலில் தொடர்ந்து பேசினார், " நாங்க கூட பிறந்தவங்க மொத்தம் 12  பேரு. நான் கடைக் குட்டிக்கு மூத்தவன். அதனால எங்க குடும்பம் பெரிய குடும்பம். அவுக, அவுக கல்யாணம் கட்டிக்கிட்டு தனித்தனியா இருக்காக.

என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
 
எனக்கு கல்யாணத்து மேல இஷ்டம் இல்லாம போச்சு. ரவுடிததனமா சுத்திக்கிட்டு இருந்தேன். டிரெயின்ல ரெம்ப தூரம் போனா கூட டிக்கெட் எடுக்கமாட்டேன். டி.டி.ஆரெ டிரெயினுக்குள்ள ஓட விடுவேன். அந்த அளவுக்கு சேட்ட பண்ணிக்கிட்டு திரிஞ்சேன். எங்க பாட்டன், பூட்டன் எல்லாரும் நல்லா செல்வம் கொழிச்சு இருந்துருக்காங்க. அதனால பணத்துக்கு கஷ்டமே இல்லாம எங்க அப்பா எங்கள வளத்தாக. காசு நிறையா இருந்ததால எனக்கு திமிரும் நிறைய இருந்துச்சு. வயசு பக்குவப்பட எல்லாத்தையும் மாத்திக்கிட்டேன். அதுக்கப்பறம் நாய் குட்டிக மேல எனக்கு ஆசை வந்து வளத்தேன். ஊர் ஆளுக பூரா சண்டை போடுவாக. அதனால எங்க அம்மா கூட சத்தம் போடுவாக. ஆனா நா எதையும் கண்டுக்க மாட்டேன். நாய்க்குட்டி செத்து போய்ட்டாலும் வேற நாய எடுத்து வளப்பேன். ஒன்னு ரெண்டாச்சு..., ரெண்டு நாலாச்சு..., நாலு நாப்பதாச்சு.... இன்னைக்கு வரைக்கும் என் கையால 60 நாய்க்கு மேல வளர்த்துருப்பேன்.

என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
 
ஆனா இப்பதைக்கு என் கையில ஒன்னே ஒன்னுதான் ஒட்டிகிட்டு இருக்கு.  என் வீட்ட சுத்தி மட்டும் 40 நாய்க்கு மேல புதைச்சு வச்சுருக்கேன். அவிங்க பூரா தூங்குறதா நினைச்சுகுறுவேன். அதுக நியாபகம் வந்தா சந்தனம் பொட்டு வச்சு, மாலை போட்டு சாமி கும்புடுவேன். ஒவ்வொரு குட்டிக்கும் எனக்கு பிடிச்ச பேருகள வச்சு வாஞ்சையா கட்டிப்புடுச்சேன். எனக்கு கிடைக்குற ஓ.ஏ.பி காசுல தான் அதுகளுக்கும் சாப்பாடு குடுப்பேன். நான் பட்டினியா கிடந்தாலும் என் பிள்ளைகள பட்டினியா போட மாட்டேன். பாலு பிஸ்கட்னு எல்லாத்தையும் நிறையா வாங்கி வச்சுருவேன். குமார் கடை வரிக்கி, கோழிகால், தயிருனு எல்லாத்தையும் வாங்கி குடுப்பேன். அதனால என் மேல பாசத்த கொட்டுங்க. என் காலுல தான் தலைய வச்சு படுக்குங்க. விசிறியெல்லாம் வீசி விடுவேன். சளிபிடிக்கும்னு எவனையும் தரையில படுக்க விடமாட்டேன். பேனர் துணிகதான் அவுகளுக்கு பாயி. சேட்ட பன்ற குட்டிகள திட்டுவேன். 
 
என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
 
கொஞ்ச நேரம் ஆனா போதும் கோவத்த பூராம் உதுத்துப்புட்டு ஓடியாந்து செல்லமா மல்லு கட்டுங்க. இன்னைக்கு அதுக பூராம் இல்லாம போச்சு. வீட்ட சுத்தி புதைச்சு வச்சுருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் ஏழு குட்டிகள பறிகுடுத்தேன். ஒன்னு அடிபட்டு செத்து போச்சு. மித்ததுக எப்படியோ விஷம் ஏறி ஒன்னு, ஒன்னா சாக ஆரம்பிச்சுருச்சுக. கடைசியா இருந்த செவலைய காளையார்கோயில் ஆஸ்பத்திரில தொலைச்சுப்புட்டேன். ஆஸ்பத்திருக்கு ஆட்டோல கூட்டி போனதுக்கும், கூட்டத்த பாத்ததுக்கும் அருளு கொண்டு ஓடிப்போச்சு. தேடாத இடம் இல்ல. ரோடு, ரோடா சுத்திட்டு திரும்பி வந்துட்டேன். பாத்தவுககிட்ட பூரா சொல்லிட்டு வந்தேன். கண்டா சொல்லுங்கப்புனு. அப்படி திரும்பி வரையிலதான் இந்த புது குட்டி கிடைச்சுச்சு" என்று நாயை தடவிக் கொடுத்து கொஞ்சினார்.

என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
 
மேலும் சித்தத்தூர் கிராம பெண்கள் சிலர், "தங்கச்சாமி ஐயாவுக்கு நாய்கன்னா கிறுக்கு. அம்புட்டு பாசமாக வளப்பாக. எத்தன நாய் வச்சுருந்தாரு தெரியுமா...! ஆத்தாடி அவரு மாதிரியெல்லாம் முடியாது. பணங் காசு இருக்கவுக கூட அப்புடி பாசங் காட்ட முடியாது. தங்கச்சாமி ஐயா பணக்கார குடும்பத்துல பிறந்தவர்னு சொல்லுவாக. ஆனா அதையெல்லாம் விட்டுப்புட்டு தனியா வந்துகிடக்குறார். இன்னைக்கும் அவங்க குடும்பத்து ஆளுக தான் ஜல்லிகட்டுல சுத்துப்பட்டுல மரியாதை  வாங்குறாங்க. அவருக்கு சொந்த, பந்தம் நிறையா. அப்ப, அப்ப அவர வந்து பார்த்துக்குவாங்க.
ஆனா அவர் கல்யாணம் பண்ணிக்காம, நாய்குட்டிகள வளத்துக்கிட்டு திரியுராறு. அவர் ஒரு தனிப்பிறவி" என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தனர்.
 
என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
அவரைச் சந்தித்த அன்றைய இரவு தூக்கம் வரவில்லை. மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்ன? கருப்பிகளில் வாழ்க்கையை வைத்திருக்கும் பெருமாள், இந்தத் தங்கச்சாமி.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK Councillor

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
NEET UG 2025 Exam Date: நீட் தேர்வு தேதி அறிவிப்பு! விண்ணப்பிக்க கடை தேதி எப்போது?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
பிசினஸ் பண்ணனுமா? 15 லட்சம் வரை கடன் தரும் தமிழ்நாடு அரசு - எப்படி வாங்குறது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதிய 4 வழி சாலை... பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
Embed widget