மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டில், தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகளின் பட்டியல்..
நெல்லை, தென்காசி பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் உதவியாளர் மதார்ஷா ஜாமீன் கோரிய மனு. ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறை கிணறுகள் தண்ணீர் எடுக்க பயன்படும் பானையுடன் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை நகர் பகுதியில் உள்ள மதுரை முக்கு என்ற இடத்தில் தேநீர் குடிக்கவந்த பா.ஜ.க மீனவர் பிரிவு மாவட்ட துணை தலைவர் கே.முத்துப்பாண்டி, வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தேனி டிக்டாக் பிரபலம் சுகந்தியின் குடும்பத்தினரை ஆபாசமாக பேசியதாக தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யாவை தேனி கிரைம் போலீஸ் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 'ஸ்மார்ட்' திட்டப்பணியில் பாதாள சாக்கடை தோண்டும்போது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு இலவச பஸ் திட்டம் மூலம் 21 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் ரூ.42,184 கோடி நஷ்டத்தில் உள்ளதாகவும், கடந்த ஆட்சியில் 14 ஆயிரம் பஸ்கள் தான் ஓடியது, தற்போது 400 பஸ்கள் கூடுதலாக ஓடுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் காரைக்குடியில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பள்ளி திறக்கப்பட்ட பின் முதன்முறையாக மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மற்றபடி வேறு மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை, தென்காசி பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் 8 கிராமங்களில் 2 ஆயிரம் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளடியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு கழகம் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion