2001 இல் நடந்த சம்பவம்.. 2025 இல் வழங்கிய தீர்ப்பு.. காவல் நிலையத்தில் நடந்த கொடுமைக்கு கிடைத்த தண்டனை
பெண்ணை விசாரணைக்கு அழைத்து வந்து மானபங்கம் செய்த ஒய்வு காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.
திண்டுக்கல், செம்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணை விசாரணைக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வு காவல் ஆய்வாளர் உட்பட 2 காவலருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து வீட்டில் நகை திருடுபோனது, அவர்கள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர்கள் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் கவுசல்யாவை, 20.02.2001ல் அதிகாலை 2:00 மணிக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது கவுசல்யாவை, காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். அன்று மாலை மீண்டும் கவுசல்யாவை, காவலர்கள் விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் என வீட்டிற்கு அனுப்பினர்.
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
இதனால் மனமுடைந்த கவுசல்யா, தன் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் மீட்டு காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து கவுசல்யாவின் கணவர் சக்திவேல் மனைவிக்கு நடந்த கொடுமைகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ.விடம் புகாரளித்த நிலையில் அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் வழக்கறிஞராக ;சண்முகபார்த்தீபன் ஆஜரானார். இந்த வழக்கு நீதிபதி தீபா விசாரித்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில், ஓய்வு காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர்கள் வீரத்தேவர், சின்னதேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

