மேலும் அறிய

அநியாயமா பொய் சொல்றீங்களே? ஜோதிகாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

சினிமாவில் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா என்று எடுத்துக் கொண்டால் 60-வது வயசானாலும் நடிகர்கள் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு எத்தனையோ நடிகர்களை உதாரணமாக சொல்லலாம். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் எல்லோருமே வயதானாலும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ரஜினிகாந்திற்கு இப்போது வயது 74. இதே போன்று கமல் ஹாசனுக்கு இப்போது வயது 70.  அவர்கள் தற்போது ஹீரோ மெட்டீரியலாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அப்படியில்லை. அவர்கள் திருமணம் செய்து கொண்டாலே, அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்ற ஒரு பிம்பம் நிலவி வருகிறது. ஆனால், வயதான காலத்திலும் சினிமாவில் நடித்த நடிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதுவும், அவர்கள் லீடு ரோலிலும் நடித்திருக்கிறார்கள்.

அநியாயமா பொய் சொல்றீங்களே? ஜோதிகாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் இப்போது திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட நயன்தாரா இன்னமும் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷூம் திருமணத்திற்கு பிறகு இப்போது நடித்து வருகிறார். அப்படியிருக்கும் போது தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு இல்லை என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். பழனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 

நான் அவன் இல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல், கோமாளி, இந்தியன் 2 என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2020 ஆம் ஆண்டு கௌதம் கிட்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இதையடுத்து 2022 ஆம் ஆண்டு நீல் கிட்சலு என்ற மகன் ஒருவரையும் பெற்றெடுத்தார். இந்த நிலையில் தான் தென்னிந்திய சினிமாவில் கல்யாணத்திற்கு பிறகு நடிகைக்கு ஹீரோயின் வாய்ப்பு இல்லை. ஆனால், பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட், தீபிகா சோப்ரா என்று எல்லோருமே கல்யாணத்துக்கு பிறகும் கூட ஹீரோயினாகவே நடிக்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் தான் அப்படி யாரும் நடிப்பதில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

அநியாயமா பொய் சொல்றீங்களே? ஜோதிகாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வால்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

தற்போது காஜல் அகர்வால் கூட சிக்கந்தர், கண்ணப்பா, இந்தியன் 3 மற்றும் The India Story ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்திலும் காஜலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் 3 படத்தில் இவர் தான் ஹீரோன். இப்படி இருக்கும் நிலையில், ஏன் வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை என பொய் சொல்றீங்க என வெளுத்து வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இதற்கு முன்னதாக நடிகை ஜோதிகா கூட கல்யாணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மும்பையில் செட்டிலான ஜோதிகா பாலிவுட்டில் பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget