மேலும் அறிய

மாணவர்களே... கடைசி வாய்ப்பு- கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விவரம் இதோ!

2024- 2025ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

பி.சி. எம்.பி.சி., டி.என்.சி. மாணவர்கள் கல்வி மேற்படிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பாக, https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

மார்ச் 15 வரை நீட்டிப்பு

மாணவ / மாணவியர்களின் நலன் கருதியும், கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள ஒரு மாணவர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கத்தோடும் 2024- 2025ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பியுங்கள்

மேலும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், அனைத்து மாணாக்கர்களும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* மாணவர்கள் https://umisdashboard.tnega.org/auth/login என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதில், முதல் முறையாக லாகின் செய்பவர்கள், எமிஸ் எண்ணை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.

* பிறர் தங்களின் யூசர் ஐடி, கடவுச் சொல், கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டியது முக்கியம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://umis.tn.gov.in 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Cabinet: CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
PM Modi:
PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Cabinet: CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
PM Modi:
PM Modi: "WFH பாருங்க.. தங்கம் வாங்காதீங்க.. பெட்ரோல் கம்மியா யூஸ் பண்ணுங்க.." மக்களுக்கு மோடி வேண்டுகோள்
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
CM Vijay: ஓட்டுப்போட்டவங்க நம்பிக்கையை காப்பாத்திடுங்க CM சார்! விஜய்க்காக மக்கள் ஆனந்த கண்ணீர்!
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
Embed widget