மேலும் அறிய

NIRF Ranking: டாப் கல்லூரிகள் பத்தி தெரியணுமா? 2025 என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியல் எப்போது?

NIRF Ranking 2025: 2024ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல 2025ஆம் ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம்.

ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எஃப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியல் ஆண்டுதோறும் பொதுவாக ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? 

தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.

6ஆம் ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்

இதில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை பட்டியலிடப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில், ஒட்டுமொத்தமாக கடந்த முறை 6ஆவது ஆண்டாக ஐஐடி சென்னை தொடர்ச்சியாக முதலிடம் பிடித்தது. பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்தம் 89.79 மதிப்பெண்களைப் பெற்று இருந்தது. 

2025 என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியல் எப்போது?

இதற்கிடையே 2024ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல 2025ஆம் ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 டாப் பொறியியல் கல்லூரிகள் எவை எவை?

  • ஐஐடி சென்னை,
  • ஐஐடி டெல்லி,
  • ஐஐடி பாம்பே,
  • ஐஐடி கான்பூர்,
  • ஐஐடி காரக்பூர்,
  • ஐஐடி ரூர்க்கி,
  • ஐஐடி குவாஹாட்டி,
  • ஐஐடி ஹைதராபாத்,
  • என்ஐடி திருச்சி,
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி.

    ஒட்டுமொத்தப் பிரிவில் டாப் 100 தமிழகக் கல்லூரிகள் (18)

    ஐஐடி சென்னை – 1

    அமிர்த விஸ்வ வித்யபீடம் – 18

    விஐடி, வேலூர் – 19

    அண்ணா பல்கலைக்கழகம் – 20

    எஸ்.ஆர்.எம். அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி – 21

    சவீதா கல்லூரி – 22

    என்ஐடி, திருச்சி – 31

    பாரதியார் பல்கலைக்கழகம்- 44

    சாஸ்திரா பல்கலைக்கழகம்- 47

    கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி - 50

    பாரதிதாசன் பல்கலைக்கழகம்- 55

    சென்னை பல்கலைக்கழகம்- 64

    அழகப்பா பல்கலைக்கழகம்- 76

    எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி -81

    சத்யபாமா கல்லூரி- 85

    பாரத் பல்கலைக்கழகம்- 91

    ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் - 96

    பெரியார் பல்கலைக்கழகம் - 100

கடந்த ஆண்டு டாப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்

இந்தியாவிலேயே மாநிலப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பிடித்து, அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அசத்தியது. மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் 3ஆம் இடத்தைப் பிடித்தது.

கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் 8ஆம் இடத்தைப் பிடித்தது. சென்னை பல்கலைக்கழகம் 12ஆம் இடத்தையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 16ஆவது இடத்தையும் பிடித்தது. அதேபோல, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 17ஆவது இடத்திலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 25ஆவது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 26ஆவது இடத்தையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 31ஆவது இடத்திலும் இருந்தன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 37ஆவது இடத்திலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் 49ஆவது இடத்திலும் இருந்தன.

டாப் தமிழக பொறியியல் கல்லூரிகள்-தரவரிசை இடம்

  • ஐஐடி சென்னை - 1
  • என்ஐடி திருச்சி - 9
  • விஐடி வேலூர்- 11
  • எஸ்.ஆர்.எம். கல்லூரி, சென்னை - 13
  • அண்ணா பல்கலைக்கழகம் - 14
  • அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை – 23
  • கலசலிங்கம் கல்லூரி ஸ்ரீவில்லிப்புத்தூர் - 36
  • சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 38
  • எஸ்.எஸ்.என். கல்லூரி, காலவாக்கம் -  46
  • சவீதா கல்லூரி, சென்னை - 64
  • சத்யபாமா கல்லூரி, சென்னை - 66
  • பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோவை - 67
  • ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, கோவை - 83
  • வேல் டெக் கல்லூரி, சென்னை- 86

கூடுதல் தகவல்களுக்கு:  https://www.nirfindia.org/

தொலைபேசி எண்கள்: 011-4015 9583,  011-2436 0653, 011-4015 9587,  011-4015 9589

இ மெயில்: helpdesk@nirfindia.org

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget